பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 257 அவனோடு பத்து நிமிஷம் பேசி அனுப்பினார். நாகமங்கலம் போய்விட்டு வந்த நினைவுகளை டைரியில் எழுதினார்.

தூங்குமுன் வழக்கமாகப் படிக்கும் கீதைப் பகுதியைப் படித்தபோதும், படுக்கையை நோக்கி நடந்த போதும் நெஞ்சு தாங்க முடியாமல் வலித்தது. மறுபடி திரும்பிப் போய் அறைக் கோடியில் ஒரு மேடையில் வைக்கப்பட்டிருந்த அந்த வீணையை எடுத்து வந்து கண்பார்வையில் படும்படி படுக்கைக்கு அருகே கிடந்த பெஞ்சின்மேல் வைத்துக் கொண்டார். ஜன்னல் வழியே நிலா ஒளியில் மலைகளும், ஒடைக் கரையும், மரங்களும் அழகாகவும் நிசப்தமாகவும் அவரையே பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றின. ஒடை நீர் கலகலவென்று பாயும் ஜலதரங்க ஒலியாகத் தொலைவில் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நிலாக்காலத்து முன்னிரவின் செளந்தரியங்கள் அமைதியான அந்த ஆசிரமத்தைச் சுற்றிலும் சூழ்ந்திருந்தன. நிசப்தத்தின் அர்த்தமில்லாத சங்கீதம் போல் காற்று வீசிக் கொண்டிருந்தது. மேகங்கள் இல்லாத நீல நீர்க்குளம்போல் நிலாவைச் சுற்றிய ஆகாயம் களங்க மற்றுத் தெரிந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்தார் அவர். -

எங்கிருந்தோ தெலியலேது ராமா பக்தி மார்க்கமு - என்று ஒரு குரல் மிருதுவாக அவர் செவிகளில் வந்து பூவிதழ்களாய்ச் சொற்களை உதிப்பதுபோல் உணர்ந்தபோது, அவருடைய நெஞ்சு மேலும் தாங்க முடியாமல் வலித்தது. நிலாக்காலத்து முன்னிரவின் சோபைகளும் ஆகாயத்தின் நீலநிற செளபாக்கியங்களும், ஒடை நீரின் உருவமில்லாத பேச்சும். அநுராகத்தின் சுப.சோபனங்களை உணர்த்தும் தென்றலும் எல்லாமே சங்கீதமாய் நிறைந்து தவிப்பது போல் மனத்துள் உணர்ந்தார் அவர். . . . .

அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த வீணையில் வளைகள் அணிந்த தந்தநிறக் கைகள் மெல்ல வந்து ஸ்வர ஜதிகளையும், ராக தேவதைகளையும் மிருதுவாகத் தடவிக் கொடுப்பதுபோல் மீட்டின. அந்த