பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி. 83 அவற்றை அடையும் மார்க்கம் புரிவதில்லை; நடுவில் எத்தனை சுவர்களோ தடுக்கின்றன.

- மறுபடியும் அவள் பாடிய சங்கீதத்தை விடப் பேசிய சங்கீதம் நயமாயிருப்பதை உணர்ந்தான் அவன். வாசக சாலைக்கும், முத்திருளப்பன் குடும்பத்துக்கும் பத்தர் மூலம் உதவி செய்ததற்காக அவளுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்ல நினைத்து நினைத்தபடி வார்த்தைகள் வராமல் அவன் ஏதோ சொல்லத் தொடங்கியபோது, -

'அதுக்கென்ன இப்ப? நான் பெரிசா ஒண்ணும் பண்ணிடலை' - என்று பெருந்தன்மையாகப் பதில் சொல்லிப் பேச்சை உடனே முடித்துவிட்டாள் அவள்.
அந்தச் சமயத்தில் உட்புறமிருந்து அவள் தாய் தனபாக்கியத்தின் குரல் அவளைக் கூப்பிடவே,
'அம்மா கூப்பிடறா அப்புறமாப் பார்க்கறேன். உங்க உடம்பு தேறணும். கவனிச்சுக்குங்கோ...' - என்று கூறிவிட்டு அன்னமாய் அசைந்தசைந்து நடந்து போய் விட்டாள்.
காலையில் சலூனுக்குப் போய் முடி வெட்டிக் கொள்ள நினைத்திருந்தான் அவன். கீழே பத்தர் 'கில்ட்' கடையைத் திறந்திருந்தார். அவரிடம்ே கொஞ்சம் உமிக்கரி வாங்கிப் பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு சலூனுக்குப் புறப்பட்டான் ராஜாராமன்.
அவன் முடிவெட்டிக் கொண்டு திரும்பி வந்தபோது பத்தர் அவனுக்குச் சொல்வதற்காகத் தகவல் வைத்திருந்தார். -
'காந்தி - இர்வின் உடன்படிக்கையைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தை ஒட்டி மாகாண காங்கிரஸ் மாநாடு இங்கே மதுரையில் கூடப்போகிறதாம். சத்தியமூர்த்தி தலைமை வகிக்கப் போகிறாராம். பெரிய ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்யனுமாம். விருதுபட்டிக் காமராஜ் நாடார்,