பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஆத்மாவின் ராகங்கள் பத்தர். சிரித்துக் கொண்டே டவராவால் மூடி வைத்திருந்த வெள்ளித் தம்ளரை எடுத்துப் பாலை ஆற்றத் தொடங்கிய அவரிடம்,

'பத்தரே! நான் பால் குடித்துவிட்டு வந்தாச்சு. நீங்க வேறே கொண்டு வந்திருக்கீங்களே? - என்று மறுத்தான் ராஜாராமன்.

"பரவாயில்லை தம்பீ. ஆயிரமிருந்தாலும் கடைப்பால் வீட்டுப் பால் ஆயிடுங்களா?" என்று சொல்லிக் கொண்டே பாலை ஆற்றி அவனிடம் கொடுத்தார். கையில் வாங்கிய பால் கள்ளிச் சொட்டாய்ப் பாதாம்கீர் நிறத்துக்கு இருந்தது. பச்சைக் கற்பூரமும் குங்குமப்பூவும் கமகமவென்று மணந்தன. அவன் பாலைக் குடித்தான். பால் அமிர்தமாயிருந்தது. -

'ஜெயில்லே கட்டாந் தரையிலும் மொரட்டுத் கித்தான்லியும் படுத்துப் படுத்துச் சங்கடப்பட்டிருக்கீங்க. நீங்க நல்லாத தூங்குங்க தம்பி சும்மா அலையப்படாது. உடம்பையும் கவனிச்சுக்கணும். உங்களைக் கவனிக்க இப்போ உங்கம்மா கூட இல்லை."

'அது சரி புறப்பட்டுடாதீங்கள் பத்தரே! நான் உங்க கிட்டப் பேசணும்னேனே?"

'என்ன பேசணும்? எல்லாம் கார்த்தாலே பேசிப்பம்! இப்ப தூங்குங்க தம்பீ'

'இல்லை? அஞ்சு நிமிஷம் இருந்திட்டுப் போங்க. உங்க கில்ட் கடை வருமானம் என்னன்னு எனக்குத் தெரியும் பத்தரே, நீங்க கடனோ உடனோ வாங்கி அதிகமாச் சிரமப்பட்டிருக்கிங்கன்னு தெரியுது. நாற்காலி, மேஜை, அலமாரி எல்லாம் வாசகசாலைக்கு வாங்கிப் போட்டிருக்கீங்க. ரெண்டு மூணு தரம் வேலூர் வந்திருக்கீங்க; கடைசித் தடவை வந்தபோது எங்கிட்டக் கொஞ்சம் பணமும் கொடுத்தீங்க. முத்திருளப்பன் குடும்பத்துக்கு வேற