பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 91 -

'ஒண்னுமில்லே! கொஞ்ச நாளைக்கு அது சொல்றபடிதான் செய்யுங்களேன்னு சொல்ல வந்தேன்...'

'பத்தரே! நான் பெரிய தப்புப் பண்ணி விட்டேன்."

“என்ன சொல்றீங்க தம்பீடி:

'உம்ம பேச்சைக் கேட்டு வாசக சாலைக்கு இந்த மாடியை வாடகைக்குப் பிடித்ததைத்தான் சொல்றேன்."

'அதிலே என்ன தப்பு'

'என் பிரிய மெல்லாம் தேசத்திற்காகச் செலவிட வேண்டிய சமயத்தில் இன்னொருவருடைய பிரியத்தில் நான் மூழ்க முடியாது."

தேசத்து மேலே பிரியம் செலுத்துறதுலே மதுரமும் குறைஞ்சவ இல்லை. அதுவும் ராட்டை வாங்கி வச்சிக் கதர் நூற்குது. வீணை வாசிக்கிறதிலே உள்ள பிரியம், நூல் நூற்கிறதிலேயும் அதுக்கு இருக்கு. அதுவும் மகாத்மா காந்தியைத் தெய்வமாகக் கொண்டாடுது. அதுனோட வீட்டுக்கு வீணைக் கச்சேரி கேட்க வருகிற நாதமங்கலம் ஜமீன்தாரும், திருவேங்கடம் முதலியாரும், தென்கரை வக்கீலும் ஜஸ்டிஸ்காரங்கதான் என்றாலும் அது பிரிட்டிஷ் ஆட்சியை வெறுக்குது. அதுக்கு தேசத்துக்கு மேலே உள்ள பிரியமும், உங்க மேலே உள்ள பிரியமும் வேற வேற இல்லே. இரண்டும் ஒண்ணுதான். சொல்லப்போனா தேசத்து மேலே உள்ள பக்தியாலேதான் அதுக்கு உங்கமேலேயும் பக்தி ஏற்பட்டிருக்கு. உங்களைப் பார்க்கிறதுக்கு முந்தியே அது ராட்டை நூற்குது, உங்களைப் பார்க்கிறதுக்கு முந்தியே காந்தியைக்கொண்டாடுது.'

'அதனாலே?"

'தம்பி! இங்கே பாருங்க! எனக்குச் சுத்தி வளைச்சுப்

பேச வராது. இது கில்ட் இல்லே; அசல் சொக்கத் தங்கம். அவ்வளவுதான் நான் சொல்வேன். அப்புறம் உங்கபாடு.'