பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 193 புரியாத மர்மமும் பாரதநாட்டைக் கலங்க வைக்கும் நிகழ்ச்சிகளாக அமைந்தன.

மகாத்மா காந்தி புனாவில் ஆகாகான் மாளிகையிலும் மற்றுமுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் அகமத் நகர் கோட்டையிலும் சிறை வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறைவாசத்தைத் தொடங்கும்போதே தமது உயிருக்குயிரான மகாதேவ தேசாயை இழந்து வருந்திய மகாத்மாவுக்கு அடுத்த பேரிடியாகக் கஸ்தூரி பாய் காந்தியின் மரணமும் நேர்ந்தது. அக்காலத்தில் சிறைப்படாமல்

-காங்கிரஸில் கருத்து வேறுபட்டு வெளியே இருந்து முடிந்ததைச் செய்தவர்கள் புலாபாய் தேசாயும் ராஜாஜியுமே. கஸ்தூரிபாய் காந்தியின் மரணத்துக்கு முன்பே நாட்டில் நடைபெறும் கொடுமைகளைக் கேட்டு மனம் நொந்து, 21 நாள் உபவாசமும், உண்ணாவிரதமும் இருந்து தளர்ந்திருந்த காந்தியடிகளின் உடல்நிலை துயரங்களின் கனம் தாங்காது மேலும் மேலும் தளர்ந்தது. உடனிருந்தவர்கள் வருந்தினர்.

முன்பு வேலூரிலும், கடலூரிலும், திருச்சியிலும் நண்பர்கள் பார்க்க வந்ததுபோல் இங்கு அமராவதிக்கு ராஜாராமனை யாரும் பார்க்க வரவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது. எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி எப்படியோ மகாதேவதேசாயின் மரணமும், அன்னை கஸ்தூரிபாய் காந்தியின் மரணமும் தெரிந்த வேளைகளில் ராஜாராமன் கண் கலங்கினான். எல்லா தேசபக்தர்களையுமே அதிரச் செய்தன, அந்தத் துயரச் செய்திகள். ஊரைப் பற்றியும், நண்பர்களைப் பற்றியும், வாசகசாலையைப் பற்றியும், ரத்தினவேல் பத்தரின் உடல் நிலையைப் பற்றியும் பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் பழைய சம்பவங்களை நினைத்து நினைத்து மனம் நெகிழ்ந்து உருகினான் ராஜாராமன். காலம் மிகவும் மெதுவாக நகர்வது போல் சிறைவாசம் மிக வேதனையாயிருந்தது. . . . . . ...,

ஆ.ரா - 13