பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 143 கொஞ்சம் பொருள் வசதியம் கிடைத்தால் நானே அப்படி ஒரு குருகுலத்தைத் தொடங்கி விடுவேன். இன்று என்னுடைய ஆசையெல்லாம் அதில்தான் இருக்கிறது. செயல் திட்டத்தோடு கூடிய அமைப்பு இல்லாமல் நாம் கானும் புதிய பாரத சமூகத்தை உருவாக்க முடியாது. இயக்கங்கள் நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கலாம். சமூகப் பழக்க வழக்கங்களிலுள்ள அடிமைத்தனத்தி லிருந்தும், அறியாமையிலிருந்தும் விடுதலை பெற இப்படி அமைப்புக்கள் நாடெங்கும் அவசியம். நாளை இந்தியாவை இவைதான் காக்க முடியும்,' என்றார் அவர். காந்தி மகானின் சபர்மதி ஆசிரமத்தின் தன்மையும், சேரமாதேவி குருகுலத்தின் இலட்சியமும் சாந்தி நிகேதனத்தின் அழகும் பொருந்திய ஒரு புது அமைப்பை அவர் விரும்பினார்.

புதுக்கோட்டையிலிருந்து விடை பெறும்போது பிரிய மனமில்லாமலே பிரித்தார்கள் அவர்கள. மதுரை திரும்பியதும் ராஜாராமன் மதுரம் இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். ஏதோ காய்ச்சலில் விழுந்து - பிழைத்து எழுந்தவள் போல இளைத்து வாடியிருந்தாள் அவள். தனபாக்கியம் வெள்ளைப்புடவையும் நெற்றியில் திருநீறுமாகக் கோலம் மாறியிருந்ததையும் அவன் கவனித்தான். என்ன்ென்னவோ தப்புத் தப்பாக நினைத்திருந்த பழைய நினைவுகளுக்காக அவன் மனம் கூசியது. திரும்பத் திரும்பத் தெரிவதையும், ஏற்கெனவே தெரிந்து கொண்டிருந்ததையும் சேர்த்து நினைத்த போதெல்லாம் அவன் மனம் கூசியது.

அவன் மதுரத்துக்கு நிறைய ஆறுதல் சொல்லித் தேற்றினான். நாகமங்கலத்தாரைப் பற்றி அவன் துக்கம் கேட்கத் தொடங்கியபோதே அவள் சிறு குழந்தை போல் விசும்பி விசும்பி அழத் தொடங்கிவிட்டாள். தந்தையின் மேல் அவளுக்கிருந்த பாசம் அவனை வியக்கச் செய்தது. ஜமீன்தாரின் பெருந்தன்மையைப் பற்றி அவள் சம்பவம், சம்பவமாகச் சொல்லி அழுதாள். தம்முடைய சொந்த மனைவி வயிற்றுப் பிள்ளைகளைப் போலவும் அதைவிட