பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 141 அன்று அமர்ந்திருந்த காட்சியை மீண்டும் நினைவுகூற முயன்றான் அவன் தன்னுடைய மனம் சில வேளைகளில் செய்துவிட்ட தப்பான அநுமானங்களுக்காக இப்போது தனக்குத் தானே வெட்கப்பட்டான் ராஜாராமன். மதுரத்தை உடனே பார்க்க வேண்டும் போல் இப்போது பிரியம் பொங்கியது அவனுள். சேற்றில் தாமரைப் பூவாக அவனுள் அவள் நிரூபணம் பெற்றுவிட்டாள். அந்த நிரூபணம் அவன் அன்பைத் தாகமாகவே மாற்றியது. அவன் அவளைக் காணத் தவித்தான். 'எல்லையிலாததோர் காட்டில் நள்ளிருளென்றும் ஒளியென்றும்' என்ற வரிகள் அவனுக்கு நினைவு வந்தன. அந்தக் குரல் இப்போது புரிந்தது. அது யாருடையது என்றும் தெரிந்தது. மதுரத்துக்குத் தன்னுடைய ஆறுதல்களைத் தெரிவிக்கும்படி அவன் பத்தரிடம் கூறி அனுப்பினான்.

+ ★ - ★

மறு மாதம் அவன் விடுதலையாகிற தின்த்தன்று, அவனை அழைத்துக் கொண்டு போக முத்திருளப்பனும், பத்தரும் கடலூர் வந்திருந்தபோது, மதுரமே ஒரு கடிதம் கொடுத்தனுப்பியிருந்தாள். அவன் பத்தரிடம் கூறியனுப்பி யிருந்த வார்த்தைகள் தனக்கு மிகவும் ஆறுதலளித்ததாக அவள் எழுதியிருந்தாள். 'என்னை வாஞ்சையோடு வளர்த்தது மட்டுமின்றி, என் வீணையின் முதல் இரசிகராகவும் இருந்த அப்பா காலமாகி விட்டது என்னைப் பெரிதும் கலங்கச் செய்துவிட்டது என்று அவள் தன் தந்தையின் மரணத்தைப் பற்றி அந்தக் கடிதத்தில் மனம் உருகி எழுதியிருந்த வரிகள் அவன் இதயத்தைத் தாக்கின. சிறுவயதிலிருந்து ஜமீன்தார் தன்னைச் செல்லப் பெண்ணாக வளர்த்த பெருமைகளை, ஒவ்வொன்றாக அந்தக் கடிதத்தில் அவள் கூறியிருந்தாள்.

உடன் வந்த பத்தரோடும், முத்திருளப்பனோடும் கடலூரிலிருந்து நேரே மதுரை போகாமல் திருச்சியில் இறங்கிப் புதுக்கோட்டை சென்றான் ராஜாராமன். பிருகதீஸ்வரனுடன் இரண்டுநாள் தங்கிவிட்டு, அப்புறம் அங்கிருந்து மதுரை புறப்பட்டார்கள் அவர்கள். அந்த முறை