பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 137 கூறப்பட்ட குறைகளும் அதிகாரிகளால் அலட்சியமே செய்யப்பட்டன. ... ." -

அவன் கடலூர் சிறைக்கு வந்த சிறிது காலத்திற்குப் பின்பு முத்திருளப்பனும், பத்தரும் அவனைச் சந்திக்க வந்திருந்த ஒரு சமயத்தில்தான், மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை அவர்கள் மூலமாக அவ்வப் போது ஏதாவது தகவல் சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தான், அவன். அவளும் ஏதாவது கடிதம் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தாள். கடலூர் சிறையில் அவனுடைய உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மார்புக் கூடு பின்னித் தெரிவது போல் எலும்பும் தோலுமாக ஆகிவிட்டான் அவன். குளிப்பதற்கும் தண்ணிரை உபயோகப்படுத்துவதற்கும் அதிகக் கடுமையான நிபந்தனைகள் இருந்தன அங்கே. படுக்க விரிப்பு வசதிகள் அறவே இல்லை. முழங்கையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு அப்படியே தூங்க வேண்டியதுதான். மலஜல நாற்றமும், முடைவீச்சும், அழுக்குத் துணிகளின் வாடையுமாக ஒவ்வொரு நாளும் அருவருப்போடு கழிக்க வேண்டியிருந்தது.

வேலூரில் செய்தது போல பாரதி பாடல் வகுப்புக்கள் நடத்தவோ, அடிக்கடி ஒன்று சேர்ந்து, எல்லாரும் ஒருமுகமான மனத்துடன் பிரார்த்தனைக் கீதங்கள் இசைக்கவோ கடலூர் ஜெயிலில் வாய்ப்புக்கள் இல்லை. மன ஆறுதலோ, நிம்மதியோ கிடைக்க முடியாத காராக் கிருக வாசமாகவே இருந்தது அது. - -

மனத்தில் தனிமை உறுத்திய ஒரு பின்னிரவில் நீண்ட நேரம் தூக்கம் வராமல் அவஸ்தைப் பட்டுவிட்டுச் சிறிது கண்ணயர்ந்த அவன் ஒரு சுகமான கனவு கண்டான். மதுரம் கனவில் சர்க்கா நூற்றுக் கொண்ட்ே தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' என்று பாடுகிறாள். அவன் அருகே அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறான்; நேரம் போவதே தெரியவில்லை. : . . . . . "