பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 161 மாந்தோப்பின் தென்புறச் சரிவில் மேற்குத் தொடர்ச்சி

மலையில் உற்பத்தியாகி, நெடுந்துரம் ஒடையாகவே வந்து

பின்பு வைகையில் கலந்துவிடும் ஒரு பெரிய கால்வாய்

பாய்ந்து கொண்டிருந்தது. அந்த ஒடைக்குப் பன்னீர் ஓடை

என்பதாகத் தோட்டத்துக் காவல் ஆள் பெயர் கூறினான்.

தோட்டத்திற்குள் இருந்து ஒடைக்கு இறங்க இரண்டு

மூன்று இடங்களில் ஜமீன்தாரே எப்போதோ கச்சிதமான

படிகளைக் கட்டிவிட்டிருந்தார். தோட்டத்துக்குள்ளேயும்

இரண்டு மூன்று இடங்களில் பெரிய பெரிய இறங்கு

கிணறுகள் இருந்தன. கிணற்றின் தண்ணிர் கரும்பாக இனித்தது. எதிர்க்கரையில் ஒடையில் மறுபுறமாக ஒரு

கரடு இருந்தது. அதை மலையென்றும் சொல்ல முடியாது.

பெரிய மரங்கள் அடர்ந்திருக்கவில்லை என்றாலும், அந்தக்

கரடு ஏதோ காட்டுச் செடி கொடிகளால் மண் தெரியாத படி

பசுமையாயிருந்தது. சிறிய மலைபோன்ற கரடும் அடுத்து

ஒடையும், அதையடுத்து மாந்தோப்புமாக அந்த இடம்

அற்புதமான இயற்கை அழகு கொழிப்பதாகத் தோன்றியது.

சர்க்கா நூற்பது, கதர் நெய்வது, தவிர முதலில் ஒர்

ஆரம்பப்பள்ளி நடத்தவும், பின்பு படிப்படியாக உயர்

தரப்பள்ளி, கிராமீயக் கலாசாலை ஆகியவற்றை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள்.

படிப்பறிவில்லாத ஏழைகளுக்கும் படிக்க வசதியற்ற

நாட்டுப்புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப் பட்டவர்களுக்கும் அறிவு

புகட்டுவது ஆசிரமத்தின் முக்கிய நோக்கமாக அமைய

வேண்டும் என்று கருதினார் பிருகதீஸ்வரன்.

மதுரை திரும்பியதும் ஆசிரமத்திதுக்குப் பெயர் வைப்பது பற்றி யோசித்தார்கள். மூத்தவரும் அநுபவஸ்தரும் ஆகிய வைத்தியநாதய்யரிடம் போய்க் கேட்கலாம் என்றான் ராஜாராமன். அவர்கள் வைத்தியநாதய்யரைச் சந்திக்கச் சென்றார்கள். அப்போது மதுரை வந்திருந்த மட்டப்பாறை வெங்கட்ராமய்யரையும் சந்திக்கச் சொல்லி அவர்களுக்கு அவர் கூறினார். ஆசிரமத்தின் பெயர் சம்பந்தமாக யோசனை கேட்டபோது, , , , , . . . - . . . . . .:

ஆ.ரா – 11