பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 251 கொடுத்து வைக்கவில்லை. நாட்டின் அடுத்த பேரதிர்ச்சியாக ஜவஹர்லால் நேருவின் மரணம் நேர்ந்தது. அன்று. தன் டைரியில் கீழ்கண்டவாறு எழுதினார் அவர்: -

'தேசத்தின் ரோஜாக் கனவு அழிந்துவிட்டது. ரோஜா இதழ்களைத் திறந்து பேசிய வாய் இனிப் பேசாது. ரோஜாப்பூக் கைகள் இனி பணி புரியா. எனக்குப் பின் என் மொழியை நேரு பேசுவார் என்று யாரைப் பற்றிப் பெருமையாக மகாத்மா சொல்லிவிட்டுப் போயிருந்தாரோ அந்த இனிய வாரிசும் பாரத நாட்டில் இன்று மறைந்துவிட்டது.

ஜவஹர்லால் நேருவுக்குப்பின் வலிமை வாய்ந்த தலைமை - தேசம் முழுவதும் செவிசாய்க்கும் ஒரு தலைமை இல்லாமற் போய்விட்டது. லால்பகதூர் சாஸ்திரி வந்தார். நாடு முழுவதும் மொழிக் கிளர்ச்சி தீயாய்ப் பரவியது; அவசரப்பட வேண்டாததற்கு அவசரப்பட்டு கலகத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள நேர்ந்தது. தேசிய ஒருமைப்பாடு மொழிப் பிரச்னையால் சின்னா பின்னமாகிவிடும் போலிருந்தது. வடக்கும், தெற்கும் இணைந்த மனப்பான்மையோடிருக்கப் பாடுபடும் நியாயமான செல்வாக்குள்ள தலைமை இல்லை. பஞ்சசீலக் கரம் நீட்டிய இந்தியாவின் காலை வாரிவிட்டு விட்டிருந்தது சீனா.

போராட்டங்களின் முறை மாறியது. சுதந்திரத்துக்கு முன்பு சத்தியாக்கிரகமும், தியாகவுணர்வும் பிறரை, மனங்கனிய வைப்பதற்காகத் தன்னைத் துன்புறுத்திக் கொள்ளுதலும் அடங்கிய சாத்வீகப் போர் முறை இருந்தது. படிப்படியாகத் தியாகமனப்பான்மை குறைந்து வேண்டி யதைத் துன்புறுத்திப் பெறலாம் என்ற அசுர மனப்பான்மை சில பகுதிகளில் வந்துவிட்டது. ஒரு சத்தியாக்கிரகிக்குத் தன்னைக் கொன்று கொள்ளும் பலம் வேண்டுமென்றார் மகாத்மா. தேவையை அடையப் பிறரைக் கொல்லலாம் என்று நினைக்குமளவுக்கு மாறியிருந்தது நாடு. ஒவ்வொரு