பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . 207 பாவம், சும்மா சொல்லப்படாது. தம் சொந்தப் பெண்ணைக் கவனிச்சுக்கற மாதிரிப் பார்த்துக்கறா. நீ வந்து கொஞ்ச நாள் அங்கேயே கூடத் தங்கியிருந்தீன்னா, மதுரத்துக்கு உடம்பு தேறிடும்...' -

'ஜமீன்தார் காலமானப்புறம் அந்தக் குடும்பத்தைப் பத்தி நான், மதுரம் எல்லாருமே தப்பா நினைச்சிருந்தோம். மதுரத்தின் அம்மா காலமானப்ப ஜமீன்தாரிணியும், மத்தவங்களும் மதுரத்தைப் பார்த்துத் துக்கம் கேட்க வந்திருந்தாங்கன்னு கேட்டப்ப ஓரளவு அவுங்க மனசு கூட மாறியிருக்குன்னு தெரிஞ்சது. இப்ப மதுரத்தை அங்கே அழைச்சுண்டு போய் வச்சுக் கண்ணுங் கருத்துமாக் கவனிச்சுக்கிறாங்கன்னு நீங்க சொல்றதைக் கேட்டு, மனசுக்குச் சந்தோஷமாயிருக்கு...'

' உண்மையே அதுதான் ராஜா மனுஷாளிலே நிரந்தரமாக கெட்டவங்க யாருமே கிடையாது. காலதேச வர்த்தமானங்களிலே எல்லாரும் மாற முடியும்கிறதைத் தான் இந்த ஜமீன்தாரிணி விஷயத்திலேயும் பார்க்கிறோம்."

நாகமங்கலத்துக்குப் புறப்படும் முன்னால் ஆசிரம நிலைகளைப் பற்றியும் அவர்கள் சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். முத்திருளப்பன் ஆசிரமப் பள்ளிக் கூடத்தில் ஆசிரியரான சிறு காலத்தில் ஆசிரமத்துக்கு அருகிலுள்ள கிராமத்திலேயே ஒரு வீடு பார்த்துக் குடும்பத்தோடு அங்கே குடி வந்து விட்டதாகத் தெரிந்தது. அந்த சில வருடங்களில் ஆசிரமத்துக்கு ஏற்பட்ட பொருளாதாரத் தட்டுப்பாடுகளையும், தடைகளையும், கஷ்டங்களையம் நண்பர்கள் அவனுக்குக் கூறினார்கள். பெரியகுளம் தாலுகா- அது மந்தன்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி ஐயங்கார் என்ற தேசபக்தரும், திண்டுக்கல் அப்துல் சத்தார் சாயபுவைச் சேர்ந்தவர்களும் அந்தக் கஷ்டகாலத்தில் மாதம் தவறாமல் சத்திய சேவா சிரமச் செலவுக்காக ஐம்பது ஐம்பது ரூபாய் மணியார்டர் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தியைக் கண்களில்