பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஆத்மாவின் ராகங்கள்

'அது சரி! ஆனா, நான் சிட்டத்தைக் கொண்டு போட்டுட்டுப் புடவை கேட்டால்- வஸ்திராலயத்திலேயே சந்தேகப்படுவாளே மதுரம் ? எங்கம்மாவும் போயிட்டா. நான் யாருக்காகப் புடவை வாங்கறேன்னு இல்லாத சந்தேகம்லாம் வருமே! என்ன செய்யலாம்?"

'உங்க கையாலே வாங்கிக் கட்டிக்கனும்னு எனக்கு ஆசை மறுத்துச் சொல்லாதீங்க..."

அவன் நூல் சிட்டங்களை வாங்கிக் கொண்டான். சாப்பிடறதுக்கு ஏதாவது கொண்டு வரட்டுமா?" வேண்டாம் சிநேகிதர் ஒருத்தர் வரப்போறார். ரெண்டு பேருமாக் கதர் விற்கப் போறோம். மத்தியானமும் நான் இங்கே சாப்பிட வரமாட்டேன்." 'காப்பியாவது தரேனே?" 'விடமாட்டே போலிருக்கே?' 'விடமாட்டேன்கிற முடிவு என்னிக்கு மொதமொதலா இந்தப் பாதங்களைப் பார்த்தேனோ அப்பவே வந்தாச்சு...'

அவன் சிரித்தான்.

'எந்தக் கால்களை மனத்தினால் பற்றிக் கொண்டு விடுகிறோமோ அந்தக் கால்களை விடவே முடிவதில்லை."

சொல்லிவிட்டுக் காபி கொண்டுவரப் போனாள் மதுரம். அவள் வந்து நின்றுவிட்டுப் போனதால் அந்த அறையில் பரவிய நறுமணங்கள் இன்னும் இருந்தன. இந்தப் பெண்ணின் மேனியைக் கடவுள் சந்தனத்தாலும் பச்சைக் கற்பூரத்தாலும் மல்லிகைப் பூக்களாலும் படைத் திருக்கிறானோ - என்று நினைக்கத் தோன்றியது.

அவள் வருகிறவரை காலைத் தினசரிகளைப் புரட்டுவதில் கழிந்தது. - -