பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி. 261 ஆடினாங்க. ஆசிரமத்துக்கு எத்தனையோ சோதனை வந்தது. அதெல்லாம் உலகத்துக்குத் தெரியாது. அத்தனை ஏன்?. மதுரம்னு ஒருத்தியோட பிரியத்திலே மூழ்கி எழுந்துதான் காந்திராமன் பெரிய பெரிய காரியங்களைச் சாதிக்கும் சக்தி பெற்றான் என்பது கூட உலகத்துக்கு அதிகம் தெரியாது. காந்திராமனும் அவளுக்குக் கடைசி வரை ஆத்மபூர்வமாகத்தான் நன்றி செலுத்தினான். போகட்டும்; நீங்க இதைக் கதையா எழுதினதிலே எனக்கு ரொம்ப சந்தோஷம். எங்கள் தலைமுறையின் தேசபக்தர்கள் எல்லாருமே இந்தக் கதையிலே கதாபாத்திரங்களாக வராங்க. ரெண்டு தலைமுறைகளைச் சந்திக்க வச்சிருக்கீங்க... அதுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்' - என்றார் முத்திருளப்பன்.

'பெரியவருக்கு நான் எவ்வளவோ நன்றிக் கடன் பட்டிருக்கேன். இதென்ன சாதாரணமான பிரதியுபகாரம் கூட இல்லே. நான் எழுதாவிட்டால் இன்னும் கொஞ்ச நாள்லே வேற யாராவது இதை எழுதத்தான் செய்வாங்க 'ஆனா இதை எழுதற் உரிமையை அவரே எனக்குத் கொடுத்திருந்தார் என்பதற்காகவே நான் பெருமைப்படறேன். கதையிலே கூட நான் மாணவ வாழ்விலிருந்து அவரைச் சந்தித்துப் பழகத் தொடங்கிய காலத்தையும் நான் ஒரு பத்திரிகையாளனாக வர அவர் ஊக்கமளித்து எனக்கு உதவியதையும் வேணும்னே எழுதிக்கலை. நானே இதை எழுதினதுனாலே என்னைப் பத்திச் சொல்லிக்க வேண்டாம்னு விட்டுவிட்டேன்' என்று. நான் முத்திருளப்பனுக்குப் பதில் கூறினேன். அவர் தலைப்பைப் பற்றிப் பிரஸ்தாபித்தார்;

'இந்த கதைக்கு நீங்க மகாவிரதம்னே பேர் வச்சிருக்கனும், . । . । . ।

"வச்சிருக்கலாம்; ஆனால் இதிலே வர்ரவங்க எல்லோரும் சரீர சுகத்தையும், உடம்பின் தேவைகளையும் பெரிதாக மதிக்காமல் ஆத்மபலத்தினாலே தேசத்துக்காக