பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 82 ஆத்மாவின் ராகங்கள்

'இந்த ஆசிரமத்தை இப்படி ஏற்பாடு பண்ணியிருக் காட்டா அவருக்குப் பைத்தியமே பிடிச்சிருக்கும்; அவ்வளவு உற்சாகமாக அலைஞ்சார் பிருகதீஸ்வரன். அந்த உற்சாகத்துக்காகவே, எல்லா நகையையும் வித்துப் பணம் கொடுக்கணும்னு தோணித்து எனக்கு...' என்றாள் மதுரம்.

அப்போது அவளைப் பார்த்த அவன், அவள் மூக்கில் பேஸ்ரி, கால்களில் கொலுசுகள், கைகளில் தங்க வளைகள், காதில் வைரத்தோடு எதுவுமே இல்லாமல் மூளி யாயிருப்பதை முதல் முறையாகக் கூர்ந்து கவனித்தான்... தான் வந்த முதல் தினத்தன்று அம்மாவின் மறைவிற்குத் துக்கம் கொண்டாடுவதற்காக அவள் ஒன்றும் போட்டுக் கொள்ளாமல் கழற்றி வைத்திருப்பதாக அவன் நினைத்திருந்தான். இப்போதுதான், அவ்வளவு நகையும் பணமாக மாறி, ஆசிரமமாகியிருப்பது புரிந்தது. மேலும் பேசியதில் நகை விற்ற பணம் போதாதென்று வீட்டையும் அடமானம் வைத்துப் பெரும் தொகை வாங்கியிருப்பது தெரிந்தது. அவன் அதற்காக அவளைக் கடிந்து கொண்டான்.

அவளோ நிஷ்களங்கம்ாகப் புன்னகை பூத்தாள்.

'பணத்துக்கு என்ன? நாளைக்கே கச்சேரிக்குன்னு கிளம்பிட்டா சம்பாதிக்கலாம்... பணம் என்னிக்கும் கிடைக்கும். நல்ல மனுஷாளும், நல்ல காரியமும் தான் எப்பவும் கிடைக்கமாட்டா. நல்ல மனுஷாளும், நல்ல காரியமும் எதிர்ப்படற போதே பணத்தைச் செலவழிச்சுட்டா அதைப் போல நிம்மதி வேறே இல்லை, என்று சிரித்துக் கொண்டே அவனுக்கு மறுமொழி கூறினாள் அவள்.

பெரிய பெரிய தியாகங்களைப் பண்ணிவிட்டு, அ ை.ெ! தியாகம் என்ற நினைவே இல்லாமல் அவன் முன் பேதமையோடு சிரித்துக் கொண்டு நின்றாள் மதுரம்.

'இந்தப் பேதைக்கு எப்படி நன்றி சொல்லுவது?" என்று தெரியாமல் மலைத்து நின்றான் ராஜாராமன்.