பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ஆத்மாவின் ராகங்கள்

'நீ வாசிக்காட்டாலும் நான் எங்கேயிருந்தாலும் எப்படி இருந்தாலும், எனக்கு உன் குரல் தான் கேட்கிறது மதுரம்! போன தடவை ஜெயில்லே இருந்தப்ப உன்னை நினைச்சு, ஒரு கவி கூடக் கட்டினேன்...'

'நீங்க எங்கிட்ட இதுவரை சொல்லவே இல்லியே! எங்கே, அதை முழுக்கச் சொல்லுங்கோ கேட்கலாம்...'

'இப்ப எனக்கே சரியா நினைவு இல்லையே! இரு... அதை மறுபடி நெனைச்சுச் சரிபாார்த்துக்கிறேன்...'

'வேடிக்கைதான்! பாட்டு எழுதினவருக்கே அது நினைவில்லையா, என்ன? பாட்டை மறந்தமாதிரி என்னையும் ஒருநாள் மறந்துடப்போlங்க!'

'தப்பு! அதுமட்டும் என்னால் முடியவே முடியாது. பாட்டுத்தான் மறந்ததே ஒழிய அர்த்தம் மறக்கலே. பாட்டும் கொஞ்சம் கொஞ்சமா இப்ப நினைவு வந்திடும். மறக்காது...'

"யோசிக்சுப் பாருங்கோ... '

"இதோ ஞாபகம் வரது, சொல்றேன் கேளு..."

பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக நினைத்து, அவளுக்குச் சொன்னான் அவன். .

'எல்லையிலாத தோர் காட்டிடை - நள்

இருள் என்றும் ஒளி என்றும் சொல்ல ஒணாத தோர் மயக்கத்தே இளஞ் சோகக் குயில்ஒன் றிசைக்கிறது - அதன் சோகம் முழுதும் புரியுதிலை

சுவடு முழுதும் தெரியுதிலை தொல்லைப் பழங் காலமுதலாய் - எனைத் தேடி அலையும் குரல் “. . . . . சொல்லைக் குழைத் தாளுங்குரல் - ஒரு

சோகம் முதிர்ந்து முதிர்ந்துறிப்