பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 194 ஆத்மாவின் ராகங்கள்

சிறையில் ராஜாராமனுக்கு ஒவ்வொரு சாயங்காலமும் கடுமையான தலைவலி வேறு வந்து ராத்துக்கமே இல்லாமற் செய்து கொண்டிருந்தது. சரியான வைத்திய உதவிகள் கிடைப்பதற்குச் சிறை அதிகாரி உதவவில்லை. ஒற்றைத் தலைவலி என்று அதைச் சொன்னார்கள் நண்பர்கள். அது வருகிற நேரம் நரக வேதனையாயிருந்தது. வார்டனிடம் கெஞ்சிக் கதறி, சட்டியில் கொஞ்சம் வெந்நீர் வரவழைத்துச் சக தேச பக்தர் ஒருவர் வெந்நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் கொடுத்து வந்தார். நரக வேதனையாக அந்த வலிவரும் போதெல்லாம் இப்படி ஒரு சாதாரண வைத்திய உதவிதான் அவனுக்குக் கிடைத்தது. முன்பு மதுரம் நெற்றியில் சாம்பிராணிப் பற்று அறைத்துப் போட்ட சம்பவம் இந்தத் தலைவலி வரும்போதெல்லாம் அவனுக்கு நினைவு வந்து மனத்தை உருக்கியது. தெரிந்த மனிதர்களும், வேண்டியவர்களும் அருகே இல்லாமல் தனிமை என்ற வேதனையில் உருகி இளைத்துக் கொண்டிருந்தான் அவன். அறிந்தவர்களும், தெரிந்தவர்களும், வேண்டியவர் களுமாகிய தேசபக்தர்கள் பலர் உடனிருந்தாலும் பிருகதீஸ்வரனைப் போல் அன்பும் பாசமும், சகோதரத்துவப் பான்மையும் நிறைந்த ஒருவர் அருகில் இல்லாததால் அவன் தவித்துப் போயிருந்தான்.

★ ★ ★

1944-ம் வருடம் மே மாதம் முதல் வாரத்தில் மகாத்மா காந்தி விடுதலை செய்யப்பட்டார். செப்டம்பர் மாதம் முகம்மது அலி ஜின்னாவுடன் பாகிஸ்தான் சம்பந்தமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். - - - *

யுத்தம் ஒரு விதமாக முடிந்தது. இங்கிலாந்தில் சர்ச்சில் ஆட்சி போய் அட்லி சர்க்கார் வந்தது. உலக அரசியல் நெருக்கடியை மனதில் கொண்டும், நேதாஜி போன்ற தீவிரவாதிகளின் செயல் அதிர்ச்சியை அளித்திருந்ததாலும், யுத்தத்தில் இந்திய மக்கள் செய்த அபார உதவியை நினைத்தும் அட்லி சர்க்கார் தன் மனப்பான்மையையே