பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 253 தேர்தலில் ஜயிக்க இடையூறாக இருக்கும் என்றால் அதைச் செய்யத் தயங்குவதும், ஒரு நிச்சயமான கெட்ட காரியம்

அல்லது பொது நன்மைக்கு இடையூறான காரியம் தேர்தலில்

ஜயிக்க உதவியாக இருக்கும் என்றால் அதை உடனே செய்து

விடுவதுமாக மாறியது அரசியல், சுதந்திரப் போராட்டக்

காலத்தில் இருந்த ஆத்ம பலமும் சத்திய வேட்கையும்,

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் எங்கே போயின

என்றே தெரியவில்லை. --

Η..! (όι) வருடங்களுக்கு முன் பிருகதீஸ்வரன் தன்னிடம் கூறிய ஒரு கருத்தை இப்போது மிகவும் கவலையோடு நினைவு கூர்ந்தார் காந்திராமன்.

காந்திமகானைப்போல் ஆத்ம பலத்தை நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய் சுபாஷ் சந்திர போஸ்ைப்போல் மனவலிமையையும் உடல் வலிமையையும் நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய்விட்டால் நாளைய இந்தியாவை என்னால் நினைக்கவே முடியவில்லை. -

அன்று என்றோ அவர் கூறிய வார்த்தைகள் இன்றைய நிலைமைக்குத் தீர்க்க தரிசனம் போல் அமைந்திருந்தன. ஆத்ம பலமும், வீரமும் ஒரு புறம் இருக்கட்டும், காந்தியோடும் சுபாஷ் போசுடனும் அந்தத் தலைமுறை போய்விட்டதென்றே வைத்துக் கொள்வோம். வாக்கு நாணயமும் சத்தியத்தில் பற்றுமுள்ள ஒர் அரசியல் வாதியையாவது இங்கே சந்திக்க முடியாமலிருக்கிறதே! மணவர்களைக் கட்சி அரசியலில் ஈடுபடுத்தக் கூடாதென்று காந்தி சொன்னார். இன்று ஒவ்வொரு கட்சியும் மீன்களுக்கு வலை வீசுவதுபோல் கல்விக் கடலிலிருந்து அரசியல் கரைக்கு வரை வீசி மாணவர்களை இழுக்கின்றன. படிப்புக் கெடுகிறது. ஏழைப் பெற்றோர்கள் கவலை அடைகிறார்கள். கட்டுப்பாடு எல்லாத் திசையிலும் குலைகிறது. மூத்தவர் களை மதிப்பதில்லை. காரண காரியத்தோடு நிதானமாக விவாதிக்கவோ சிந்திக்கவோ பொறுமை இல்லை.