பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 255 ஒருவர் இருக்கிறார் என்பதைப் பற்றிக் கவலைப்படாத வேகத்தில் எங்கோ போய்க் கொண்டிருந்தாலும், அவர் நாட்டைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும், இளம் தலைமுறையைப் பற்றியுமே கவலைப்பட்டுச் சிந்தித்தார். அறிக்கைகள் விட்டார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். ஆத்மாவினால் வாழ்ந்தவர்களின் நிதானமான தலைமுறை மெல்ல மெல்ல மறைவதையும், மனத்தினால் - உடம்பினால் வளரும் தலை முறை பரபரப்பாக எதிரே எழுவதையும் கண்டு நெஞ்சு துடித்தார் அவர்.

எங்கெங்கோ ரயில்கள் கவிழ்க்கப்படுதலும் பஸ்கள் எரிக்கப்படுதலுமாகப் பத்திரிகைகளில் படித்த ஒவ்வொரு செய்தியும் அவரைத் தளர்த்தி ஒடுங்கச் செய்தன. அன்பும், கருணையும், சத்தியமும், சுபீட்சமும் நிறைந்த இந்தியாவை அவர் கண்கள் தேடின. உதாசீனமும், வெறுப்பும், குரோதமும், மனிதத் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்காத வெறும் தேர்தல் வேட்டையாடும் கட்சிகளும் நிறைந்த இந்தியாதான் எதிரே தெரியத் தொடங்கியது. தேசத்தை எண்ணிப் பல இரவுகள் உறங்காமல் தவித்தார் அவர். பார்க்க வந்த பிரமுகர்களிடம் எல்லாம் கவலைப்பட்டார். தம் வயதை ஒத்த சர்வோதயத் தலைவர்களுக்குக் கடிதங்கள் எழுதினார். காந்தியமும் சகிப்புத் தன்மையும் இந்திய மண்ணில் மறைவது போல் தோன்றும்போது எங்கோ அது உயிர் பெறுவது புரிந்தது. ஆயுத பலத்தைச் சகிப்புத் தன்மையால் எதிர்கொண்ட செக்கோஸ்லோவேக்கியாவை ரஷ்யா ஆக்கிரமித்த செய்தி வெளியான தினத்தன்று அவர் தம் டைரியில் கீழே வருமாறு எழுதினார். . . " . . . . .

'ஏ செக் நாடே ஒரு காலத்தில் இட்லர் உன் சுதந்திர நெஞ்சில் மிதித்தான். இன்றோ வியட்நாமில் மனிதத் தன்மை காப்பாற்றப்படவேண்டும்' என்று கூறிக் கொண்டே எழுபதாயிரம் ரஷ்யர்கள் துப்பாக்கிகளோடு கனமான பூட்ஸ் கால்களால் அழுத்தமாக உன் சுதந்திர நெஞ்சை மிதித்துக் கொண்டு நிற்கிறார்கள். தற்காப்புக்கு