பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ஆத்மாவின் ராகங்கள் மீண்டும், அவர் கிராமக் கைத்தொழில்களில் அக்கறை

காட்டித் தொடங்கிய குடிசைத் தொழில் திட்டத்தாலும்,

மற்றவற்றாலும் ஓரளவு நம்பிக்கை கொள்ள முடிந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் பிருகதீஸ்வரனோடு பம்பாய் காங்கிரசுக்குப் போய் விட்டு வந்திருந்தான் ராஜாராமன்.

காந்தியின் மன வேதனைகளும், சட்டமறுப்பு இயக்கம்

தளர்ச்சி அடைந்ததும், சூழ்நிலைகளை விறுவிறுப் பில்லாமல் ஆக்கியிருந்தன. அந்த வேளையில் மத்திய அசெம்பிளி தேர்தலில் தேசபக்தர்களுக்கு அமோகமான வெற்றி கிடைத்ததால் மீண்டும் ஒரு புதிய உற்சாகம் பிறந்திருந்தது. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை வில்லிங்டன் பிரபுவின் தாசர்களாக இருந்த தேசிய எதிரிகள் பலர் தேர்தலில் தோற்றது தேசபக்தர்களின் செல்வாக்கை

அதிகமாக்கியது. தேர்தல் வேலைகளாலும், இணையற்ற

வெற்றியாலும் தொண்டர்களிடையே மறுபடி விறுவிறுப்பு

வந்திருந்தது. மிக முக்கியமான நிகழ்ச்சியாக மகாத்மாவின்

தமிழ்நாட்டுச் சுற்றுப் பயணம் வாய்ந்தது.

அகில இந்திய ஹரிஜன சேவா சங்கத்தாரின் ஏற்பாட்டுப்படி காந்தி மகான் தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்தார். அவர் மதுரைக்கு வந்த தினத்தன்று நல்ல மழை. முதலில் அவருக்காக ஏற்பாடு செய்த பெருங்கூட்டம் கலைக்கப்பட்டு, மறுநாள் வேறு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் வைத்திய நாதய்யர். மதுரைக்கு மாலை 6 மணிக்கு வருவதாக இருந்த மகாத்மா இரவு பத்தரை மணிவரை வரமுடியாமல் போகவே மழையில் பிரயாணம் என்ன ஆயிற்றோ என்று கவலைப்பட்டுக் கூட்டத்தையும் கலைத்துவிட்டு வைத்திய நாதய்யர், சுப்பராமன், ராஜாராமன் எல்லாரும் திருமங்கலம் வரை எதிர் கொண்டு போய்ப் பார்த்தார்கள். காற்றும் மழையுமான அந்த தினத்தில் எதுவும் நினைத்தபடி நடக்கவில்லை. வைகையில் வெள்ளம் கோரமாயிருந்தது. மகாத்மா மதுரை வரும்போது அகாலமாகி விட்டது. ஜார்ஜ் ஜோசப், சார் திருமங்கலத்திலிருந்து கூடவே காந்தியோடு வந்தார். மகாத்மா காந்தி தேசபக்தர் சுப்பராமனின்