பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 67 அடிஷனல் போஸ்ட் ஐயப்ப பக்தனுக்கு பெருமாளுக்கும் கிடைக்கவேண்டும். அடிஷனல் போஸ்ட் என்பது உதவாக்கரை பதவி என்று அர்த்தம் 'நாரதா என் பக்தன் பெருமாள் தான் டைரக்டராக வேண்டும் என்பதைவிட. பழனிச்சாமிக்கு அந்த பதவி கிடைத்து. அவன் சென்னையில் இருக்கலாகாது என்பதே அவன் ஆசை. அதை என்னால நிராசையாக்க முடியாது.' நாரதா என் பக்தனும். அவன் பக்தனைப் போலவே நினைக்கிறான். எனக்கு இரண்டு- கடமை கொடுத்திருக்கிறான். ஒன்று அவன் சென்னையில். இந்த டைரக்டர் வேலையில் அமரவேண்டும். இன்னொன்று பெருமாள் எந்தச் சாக்கிலும் சென்னையில் இருக்கக்கூடாது. இந்த இரண்டு லட்சியங்களும் அவனுக்கு இரண்டு கண்கள். அவற்றை நான் பறிக்க முடியாது. நடமாடும் கலாட்டாவான நாரதர், குழம்பிப் போனார். மேல்தள ஓட்டை வழியாக கீழே பார்த்தார். பின்னர் துள்ளிக் குதித்தபடியே பேசினார். 'பிரபுக்களே! பெருமாள் அறையையும். பழனிச்சாமி அறையையும் விட்டுவிட்டு, நடுவறையைப் பாருங்கள். இவர்கள் வயதை... ஒத்திருந்தாலும். முடிக்கு டை அடிக்காமலும், முகத்திற்கு ரோஸ் பவுடர் போடாமலும் தோன்றும் நாயத்தை பாருங்கள்! உங்கள் பக்தர்கள் இதோ அடிக்காத குறையாய் வாதாடுகிறார்கள். இவர்களைப் பார்க்க வந்த பொதுமக்கள். எப்படி சலிக்கிறார்கள் பாருங்கள்! ஆனால் இந்த நாயகம். தன்னிடம் வருபவர்களிடம், எப்படி இனிமையாய் பேசுகிறான்! பைல்களை தேடி எடுத்து எப்படி குறிப்பெடுக்கிறான்! சம்பந்தப்பட்ட ஊழியரை வரவழைத்து ஆணையிடுகிறான். அதோ தள்ளாடும் கிழவிக்கு எப்படி உதவுகிறான் பாருங்கள்!