பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38. தோன்றாத் துணை "நானும் பார்த்துக்கிட்டே வாறேன். ஒரு வாரமா, நாலஞ்சு பொறுக்கி பசங்க, நான் ஏறுற பஸ்லயே ஏறுறாங்க. நான் இறங்கற இடத்திலேயே இறங்கறாங்க கன்னாபின்னான்னு பேசுறாங்க.." "கண்டுக்காத கொஞ்ச நாளையில அவங்க போயிடு வாங்க" அவன் பதில், அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 'முன்கோப முரடர். அந்தப் பையன்களைப் போய் உதைப் பார் என்று நினைத்து, அவள் இதுவரை சொல்லாமல் இருந்தாள். 'இந்தப் பயல்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சி கிடையாதா?” "இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம்." "உங்களுக்கென்ன. சொல்லிட்டிங்க. ஒண்னு கிடக்க ஒண்னு பண்ணிட்டாங்கன்னா?" பிரகாஷ் யோசித்தான். என்ன பதிலளிப்பது என்று அவனுக்குப் புரியவில்லை. அவன் மனைவி முருகனைக் கும்பிடுவதும், அவன் அதற்காக கிண்டல் செய்யும் போதெல்லாம் 'கந்தனை நம்பினவங்க கைவிடப் படமாட்டாங்க. குறிப்பாய் பெண்கள் அவனைக் கும் பிடணும். எந்த அயோக்கியனும் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட முடியாது” என்று அடிக்காத குறையாக அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. பிரகாஷ், அந்தச் சமயத்தில் ஏதாவது பொருத்தமாகச் சொன்னால்தான், வசந்தியின் சிநேகம் கெட்டியாகும் என்று நினைத்தவன் போல், 'பேசாமல் கந்தசாமி கோவிலுக்குப் போ. சாமியை நல்லாக் கும்பிடு, எந்த அயோக்கியனும் உன் கிட்ட வாலாட்ட முடியாது” என்றான். "அப்புறம் நாம நாளைக்கு மகாபலிபுரம் போறோம். ஞாபகம் இருக்கா?"