பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 14.5 வார்த்தைகளை, மனதிற்குள் இருந்து மூளைக்கு ஏற்றுமதியாக்குகிறார். 'திருத்தணும் முன்னு வந்தால் நான்தான் திருத்தணும். இவர்தான் திருந்தனும் இந்தப் பேச்சுக்கு முப்பது வயதாகிறது. புழு, பூச்சியாய் பரிணமிப்பதுபோல், இப்போது இதுவே தீர்க்க தரிசனமாகிவிட்டது. பொன்னம்பலம் தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தை உள்வாங்கியபடியே அவளை மானசீகக் குருவாகப் பார்த்தார். சவ்வாது மலை அனுபவத்தை, அண்டகோடி நட்சத்திர சாட்சியாக விளக்கப் போனார். அதற்காக, அவளை மாணவத்தனமாக ஏறிட்டுப் பார்த்தார். இதற்குள் வாசல் மணியோசை... சிலிண்டர் பையன் மூக்கை நுழைத்தான். அந்தம்மா தலைவாசல் பக்கம் வந்தாள். தனித்துவிடப்பட்ட பொன்னம்பலத்திடம் புதிய தெளிவு மனைவியின் நிதர்சன செயல்பாடுகளே, அவருக்கு போதிமரக் கிளைகளாயின. திட்டவட்டமான முடிவோடும், கம்பீரமாக சாமியறைக்குள் நுழைந்தார். ஒரு போராளியாய் எதிர்பார்வையை, எதிரிப் பார்வையாய் போட்டார். சின்னஞ் சிறிய அறை. மூன்றடி தூக்கியில் சுவரோடு இணைக்கப்பட்ட பளிங்குக்கல் செவ்வகத் தளம். நகைகள் லாக்கருக்குப் போனதால் வேலையற்றுப் போன நகைப் பெட்டி, கல் தளத்தின் சரிபாதியில் சுவரோரமாய் உள்ளது. அதில் வலது பக்கம் உடுப்பி கிருஷ்ணன், இடது பக்கம், வைணவப்படி ஆதிசேசனாய் கருதப்படும் சுப்பிரமணியர். நடுப்பக்கம் தர்மஸ்தலாலிங்கம், கர்நாடகத்தில் பணி புரியும்போது வாங்கியது. இவை மூன்றும் ஒன்றாய் சேர்ந்த படம். இடது பக்கத்துச் சுவரில் குழல்வாய் மொழியம்மன், குற்றால நாயகியை, குற்றாலத்திலேயே வாங்கினார். வலதுப்பக்கத்துச் சுவரில் அய்யப்பன், தளத்திற்கு மேலேயுள்ள சுவரில் முருகனும், பழனி முருகனும்,