பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 101 வந்திருக்கலாம். இப்போது என்னை அந்நியன் போலவும், அந்நியமான பெண்களைப் பிரிய மனமில்லாத பிரான சிநேகிதகள் .போலவும் அ வ ர் க ள் பார் த் து க் கொண்டிருந்தார்கள். ஆராய்ச்சி மாணவியான ரமேஷின் அக்காள், வந்தவர்களில் எவனும் தனக்கு மேட்ச் இல்லை என்பதுபோல், முகத்தைச் சுழித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பெற்றுவிட்டு, அதற்காக இப்போது பிராணனைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதுபோல், தோன்றிய பெற்றோர், சென்னையில் அவர்களின் சொந்தக்காரர்களிடம் நான் கொடுக்க வேண்டிய மோடாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, என்னைப் பார்க்கவில்லை. ஆனால், ரமேஷ் மட்டும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். பத்து வயதுப் பையனான அவனுக்குப் புரிந்ததுபோல் அழுதான். அதே சமயம் புரியாதது போல் தன் மடி மீது உட்கார்ந்திருந்தான். 'எப்போ மாமா வருவீங்க?" என்று கேட்டான். நான் வாயைத் திறக்காமல், கண்களைத் துடைப்பதைப் பார்த்துவிட்டு, "எப்பவுமே வர மாட்டேளா” என்று அழுவான். "ஆக்ராவுக்குத்தான் போறேன்.... நாளைக்கு வந்துடுவேன்' என்று நான் சொன்னதும் அவன் இலேசாகச் சிரிப்பான். சொல்லப் போனால், மடியில் இருந்த அவனைப் பார்க்கப் பார்க்க, காய்ச்சாத பால்போல, பூக்காத மொட்டுப் போல, தேயாத சந்தனம் போல, அறியாத புன்னகையின் ஏகபோக வாரிசு போல் தோன்றிய அவனை இன்னம் சில நிமிடங்களில் பிரியப் போகிறோமே என்கிற ஏக்கத்தில் எனக்கே, "ஆக்ராவுக்கே" போகவேண்டியிருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. (சென்னைக்குக் கீழ்ப்பாக்கம் எப்படியோ, அப்படி, டில்லிக்கு ஆக்ரா) ரயிலுக்குப் பச்சை கொடி காட்டியாகிவிட்டது. அந்தப் பச்சை மதலையை வாங்கிக் கொள்வதற்காக, தந்தைக்காரர் உள்ளே வந்து கைகளை விரித்தார். ஆனால்,