பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

33


(பரி. உரை) இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப் படுபவன் (பிரம்சரிய ஒழுகத்தானும், வனத்தின் கண் தீயோடு சென்று மனையாள் வழிடத் தவம் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றும் துறந்த யோக ஒழுக்கத்தானும் ஆகிய) அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணையாம்.

(ஆராய்ச்சி உரை) திருமணம் ஆவதற்கு முன் உள்ள நிலைக்குப் பிரமசரியம் என்பது பெயர். திருமணமாகி மனைவியோடு வீட்டில் வாழும் நிலைக்குக் கிருகத்தம் என்பது பெயர். வீட்டை விட்டு மனைவியுடன் காட்டையடைந்து தவம் செய்யும் நிலைக்கு வானப்பிரத்தம் என்பது பெயர், எல்லாவற்றையும் துறந்த தனித்த நிலைக்குச் சந்நியாசம் என்பது பெயர். இது வடநூல் வைப்பு முறை. இந்நான்கு திறத்தாருள், கிருகத்தனாகிய இல்வாழ்வான் ஏனைய மூன்று திறத்தாரையும் காப்பாற்றவேண்டும் என்றே இக்குறளுக்கு உரையாசிரியர்கள் பலரும் உரை தீட்டிவிட்டனர். தமிழர் தம் கோட்பாடு இன்னதன்று. இதனினும் வேறுபட்டது.

காமத்துப்பால்
களவியல் - தகையணங்குறுத்தல்
நோக்கெதிர் நோக்குதல்

(தெளிவுரை) என்னை அவ்வுருவும் மாறி மாறி நோக்குவதால் அது மக்கள் இனப் பெண்ணே. ஆயின், அப்பெண் இயற்கையாகத் தன் வடிவழகால் என்னை வருத்துவதல்லாமல், என் பார்வைக்கு எதிர் எதிராக மாறி மாறி என்னை