பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஆழ்கடலில்


(தெளிவுரை) 'து' என்றால் அனுபவித்தல், துவ்வாதவர் என்றால் அனுபவிக்காதவர் - அஃதாவது, இன்பம் அனுபவிக்க முடியாத ஏழை எளியவர்கள். இல்வாழ்வான் துறவிகளுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உணவு, உடை முதலியன உதவ வேண்டும்; ஆதரவற்ற (அனாதைப்) பிணங்களை அப்புறப் படுத்தி இறுதிக்கடன் இயற்றவேண்டும் என்பது கருத்து. ஆதரவில்லாப் பிணங்களை அப்புறப்படுத்துவது அறங்களுள் ஒன்றாக அக்காலத்தில் கருதப்பட்டது.

(மண - உரை) வருணத்தினையும் காமத்தினையும் துறந்தார்க்கும் துறவாது நல்குரவாளராய் உண்ணப்பெறாதார்க்கும். பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் துணையாவான்.

(பரி- உரை) களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும், நல்கூர்ந்தார்க்கும், ஒருவரும் இன்றித் தன்பால் வந்து இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் துணை

(ஆராய்ச்சி உரை) உரையாசிரியர்கள் பலரும், முன் குறளில் சொல்லப்பட்டுள்ள மூவருள் துறந்தாரையும் ஒருவராகச் சேர்த்துவிட்டார்கள் ஆதலின், இக்குறளில் உள்ள 'துறந்தார்க்கும்' என்ற சொல்லைக் கண்டு திகைத்து, வேறு என்னென்ன பொருள்களையோ விளம்பி இடர்ப்படுகின்றனர். மணக்குடவர், முன் குறளில் உள்ள மூவருள் ஒருவராகிய துறவி, வருணத்தினையும் நாமத்தினையும் (சாதி சமயங்களையும்) துறவாதவர் என்றும் இக் குறளில் உள்ள துறவி, வருணத்தினையும் நாமத்தினையும் துறந்தவர் என்றும் வேற்றுமைகாட்டிச் சரிசெய்யப் பார்க்கின்றார். துறவிகளுக்குள்ளேயே, வருண நாமங்களைத் துறந்தவர் என்றும் துறவாதவர் என்றும் இருவகை உண்டா ? இல்லையே! வருண நாமங்களைத் துறவாதவர்களை