பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

ஆழ்கடலில்


பணிவான் - பணிபவனே அஞ்சுவான் - அடிமையே அஞ்சுவான். ஆனால், 'நண்ணாரும் உட்கும் பீடு' என்பது குறட் பகுதி. இங்கே நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' 'உயர்வு சிறப்பு உம்மை' யாகும். அதாவது, அஞ்சாத உயர்ந்த சிறப்புடைய பகைவரையும் அஞ்சி வெட்கித் தலைகுனியச் செய்கின்ற அவ்வளவு பெரிய வீடு எனப் பொருள் கொள்க. 'நண்ணாரும் உட்கும் பிடு' என்பது, 'குறவரும் மருளும் குன்று' என்பது போன்ற தொடர் என்பதைப் பரிமேலழகர் உணராவிடினும், இலக்கணங் கற்ற ஏனையோராயினும் உணர்க. மேலும், இங்கே உட்குதல் என்றால், வெறும் பணிவு அச்சம் அன்று; தன் முடியாமைக்கு நாணித் தலை குனியும் படியான தோல்வியச்சமே உட்குதல் ஆகும்.

அடுத்து, 'பீடு' என்னும் சொல்லுக்குப் பொருள் காண 'வள்ளுவர் அகராதி'யையே புரட்டுவோம். வள்ளுவர் மற்றோரிடத்தில் 'ஏறுபோல் பீடு நடை' என்றுள்ளார். ஏறு - ஆண்சிங்கம். ஆண் சிங்கம் போன்ற பெருமித நடை என்பது அதன் பொருள். எனவே, அனைவரையும் ஆட்டிப் படைக்கும் 'ஆண்பிள்ளைச் சிங்கம்' ஆகிய தலைமகன், ஒருத்தியின் நெற்றியழகுக்குத் தன் ஆண்மையைக் கோட்டை விட்டுவிட்டான், என்பது புலனாகிறது.

இக்குறளில் உள்ள 'ஓஒ' என்பது உயிர் அளபெடை. இலக்கணக்காரர்கள் இப்போது சொல்லட்டும், இந்த உயிரளபெடை இடம் நிறைப்பதற்காகவா என்று? 'ஓஒ' என்று நீண்ட நேரம் கத்திக் கதறுவதுதானே இதன் பொருள்! இந்த 'ஓ' என்னும் இடைச்சொல் கழிவிரக்கப் பொருளில் உள்ளது. முன்பு இருந்து, இப்போது கழிந்து போனதற்காக வருந்துவதுதான் 'கழிவிரக்கம்'. முன் பிருந்த தனது பீடு இப்போது ஒழிந்து போனதாக 'ஓஒ' என வருந்துகிறான் அல்லவா? இந்த 'ஓ' என்னும் இடைச்