பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

ஆழ்கடலில்


மேலாக மதிக்கப்படுவான் எனவும், மன்னது நாடு (நிலம்) மேலாக மதிக்கப்பெறும் எனவும் கூறலாம்.

'காட்சிக்கு எளியன்' என்பதற்கு இருபொருள் கூறலாம்., பிறருக்கு எளிதில் காட்சி கொடுப்பவன் - அதாவது யாரும் எப்போதும் எளிமையாய்க் காணக்கூடியவன் என்ற பொருள் எல்லோரும் அறிந்ததே. மற்றொரு பொருள்தான் புதிது. கையில் கத்தி கம்பு வைத்துக்கொண்டிருக்கிற கடுந்தெய்வங்களைப் போலல்லாமல், காந்தியடிகளைப் போலக் காண்பதற்கு எளிய தோற்றம் உடையவன் என்பது தான் புதிய பொருள்.

ஒரு சிறிது படிப்போ , பட்டமோ, பதவியோ, பணமோ வந்துவிட்டாலே, தங்களைப் பெருமக்கள் என்று தாங்களே தவறாக எடைபோட்டுக்கொண்டு, பலரோடு பழகாமல், பேசாமல், தனியிடத்தில் தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக்கொள்கின்ற அற்பர்களுக்காக இந்தக் குறள் இயற்றப்படவில்லை. இந்தப் பதர்கள் எக்கேடுகெட்டால் என்ன? இவர்தம் செயலால் ஆவதோ, அழிவதோ ஒன்றும் இல்லை. மன்பதையோடு (சமுதாயத்தோடு) இரண்டறக் கலந்து பழகாத இந்த மரமண்டைகள் செத்தவர்க்கு நிகர், செத்தவர் எவ்வாறு வந்து பழகமுடியும்? இவ்வாறு குறுக்குவழியில் சுருக்கப் பெருமக்கள் ஆக முயல்கின்ற இன்னோர்க்காகவே,

"சிறியரே மதிக்கு மிந்தச் செல்வம் வந்துற்ற ஞான்றே
வறியன் செருக்கு மூடி வாயுளார் முகராவர்
பறியணி செவியுளாரும் பயிறரு செவிடராவர்
குறியணி கண்ணுளாரும் குருடராய் முடிவான்றே”

(பிறரை ஏறெடுத்துப் பாராமையால் குருடர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால் செவிடர்; பிறரிடம்,