பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

ஆழ்கடலில்


பொழுது, இந்த நுணுக்கங்களையெல்லாம் இன்னும் நன்றாக எடுத்துக்காட்ட முடியுமல்லவா?.

கணவனோ பட்டம் பல பெற்றவன்; பதவிமேல் பதவி வந்து மோதுகிறது; பணங்காசோ மிகுதி - இன்னும் எல்லாம் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு குறை. அதுதான் மாட்சிமையுடைய மனைவி கிடைக்காத குறை. அது இல்லாமல் வேறு எது இருந்து தான் என்ன பயன்? அவளை விரட்ட முடியாது, அன்றைக்கு ஆயிரம் பேருக்கு முன்னாலே தாலி கட்டினாயே - அவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டுவா! எனக்கு ஆக வேண்டியதைத் தீர்த்துவிடு என்று மிரட்டுவாள். எனவே, இவன் தான் கூறாமல் 'சந்நியாசம்' கொள்ளவேண்டும். இவ்வாறு கொள்ளலாமா? இதுவா இல்வாழ்க்கைக்கு அழகு? இதனால் தான். 'வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்' என்றார் வள்ளுவனார், 'பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு - பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு' என்பது பழமொழியன்றோ?.

இங்கே வள்ளுவர்க்கு ஒன்றும் ஓடவில்லை- ஒன்றும் புரியவில்லை - ஒரே குழப்பம் ~ உணர்ச்சி வயப்பட்டு விட்டார். பிற மாட்சிகளிலும், மேலானதாக மனைமாட்சியைச் சிறப்பிக்கவந்த ஆசிரியர், இந்த மாட்சி இருந்தாலும் போதாது. அந்த மாட்சி இருந்தாலும் போதாது என்று எவையேனும் சில மாட்சிகளையாயினும் குறிப்பிட்டிருக்க வேண்டுமல்லவா? எதைக் குறிப்பிட்டாலும் ஈடாகாதுபோல் தெரிகிறது. எனவே, போங்களையா, அது எந்த மாட்சியாயிருந்தாலும் முடியாது என்னும் கருத்தில், 'எனைமாட்சித்தாயினும்' என்று சொல்லிவிட்டார். மனைமாட்சி இல்லாவிடின், வாழ்க்கை இனிக்காது - சிறக்காது என்று சொல்லியிருக்கலாமே எனின், வாழ்க்கை இருந்தல்லவா அதன்பிறகு இனிப்பது - சிறப்பது? வாழ்க்கையே இல்லை போங்களையா என்று சொல்பவர்போல் எனை