பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காமத்துப்பால்
களவியல் - தகையணங் குறுத்தல்
கள்ளும் காமமும்


(தெளிவுரை) கள்ளானது. உண்டால் தான் மகிழ்ச்சி யளிக்குமே தவிர, காமத்தைப்போல் கண்ட மாத்திரத்தில் மகிழ்ச்சி தருவதில்லை .

"உண்டார்க ணல்ல கடுநறாக் காமம்போற்"
கண்டார் மகிழ் செய்த லின்று"

(உண்டார்கண் அல்லது அடு நறா காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று)

(பதவுரை) அடு நறா - அடப்பட்ட அதாவது செய்து உண்டாக்கப்பட்ட கள்ளானது, உண்டார்கண் அல்லது - அருந்தியவர்களிடத்தில் தான் மகிழ்ச்சியை உண்டாக்குமே தவிர, காமம் போல் = காமத்தைப் போல, கண்டார் மகிழ் செய்தல் இன்று - பார்த்தல் மட்டும் செய்தவரிடத்தும் மகிழ்ச்சியை உண்டாக்குவதில்லை. (அடுதல் = உண்டாக் குதல் - தயாரித்தல்; நறா = கள். கள் உண்டாக்கப் படுவதால் 'அடுநறா' எனப்பட்டது.)

(மணக்குடவர் உரை) அடப்பட்ட நறவு உண்டார் மாட்டல்லது காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று.

(பரிமேலழகர் உரை) அடப்படு நறா தன்னை யுண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது. காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தலுடைத் தன்று.

(விளக்கவுரை) 'உங்கள் பிள்ளைகளுக்குள் எந்தப் பிள்ளை நல்ல பிள்ளை? என்று வந்தவர் கேட்டாராம்.