பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

ஆழ்கடலில்


வேண்டுமானால் அந்தக் கண் கல்வியே; ஆதலின் கருத்துடன் கற்பீராக! என்று எச்சரிப்பதுபோல் இருக்கவில்லையா இந்தக் குறள்? ஈங்கு, 'கற்றறிவாளர் கருத் திலோர் கண்ணுண்டு' 'கல்லாதார் நெஞ்சத்துக் காண வொண்ணாதே,' கணக் கறிந்தார்க்கன்றிக் காண வொண்ணாது' என்னும் திருமூலர் திருமந்திரப் பகுதிகளின் உள்ளீட்டை ஒத்திட்டு நோக்குக! "ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே, ஊனக்கண் இழந்ததால் உலகினிற் குறையுண்டோ ' என்ற பாட்டு வேறுதான் இருக்கவே இருக்கிறதே!

உடைமையும் இன்மையும்

(தெளிவுரை ) செல்வரது வீட்டுக் கடைவாயிலிலே ஏங்கிக்காத்து நிற்கும் வறியவர்போல, கற்றவரது கடை வாயிலிலே காத்து நிற்றற் குரியர் கல்லாதவர்.

"உடையார்முன் இல்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்."

(பதவுரை) உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் - செல்வ முடையவர்களின் முன்னே அச்செல்வம் இல்லாத ஏழைகள் எதிர்பார்த்து ஏங்கி நிற்றல் போல ஏங்கி நின்றும், கல்லாதவர் கற்றார் கடையரே - படிக்காதவர்கள் படித்தவர்களுக்குக் கடைப்பட்டவர்களே-அதாவது படித்தவரின் கடைவாயிலில் நிற்றற்கு உரியவரேயாவர். (உடையார் -- செல்வர்; இல்லார் - வறியவர்; ஏக்கறுதல்-- ஏங்கித்தாழ்தல்.

(மணக்குடவர் உரை) பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்,