பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

ஆழ்கடலில்


(ப-ரை--- குணம் என்னும் நல்ல குணம் என்னும், குன்று - மலையின்மேல், ஏறிநின்றார் - ஏறி நிற்கும் பெரியார்களின், வெகுளி - சினத்தை , கணமேயும் - (அஃது இருப்பது) கணப்பொழுதேயாயினும், காத்தல் --(அதனால் தீங்கு வராதபடித்) தடுத்துக் காத்தல், அரிது - (பிறர்க்கு) முடியாது.

(தெ-ரை) பெரியார்கட்குப் பெரும்பாலும் சினம் தோன்றாது. தோன்றினும் ஏனையோரைப்போல அடிக்கடித் தோன்றாது ; பெரிதாகத் தோன்றாது; தோன்றியதும் நீண்ட நேரம் நிலைத்து நின்றுகொண்டே இருக்காது; ஏதோ ஒரு நேரத்தில் மட்டும் ஒருகண நேரமே தோன்றும்; பின் உடனே மறைந்துவிடும். கணநேரம் நிற்கும் அச்சினத்தையும் பிறர் தடுத்துத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. அவர்கள் சினந்து, ஒன்றை நினைத்தலோ, சொல்லுதலோ, நிகழ்த்துதலோ செய்வார்களாயின் அப்படியே நடந்தே தீரும். இதனால் பெரியார்களின் பெருமை விளங்கும். கணம் என்பது மிகமிகச் சிறிய கால அளவைக் குறிக்கும். காத்தல் என்றால் வாராமல் தடுத்துக் காத்தல் என்பது பொருள். இப்பொருளைக் 'குற்றமே காக்க' என்னும் குறளானும் உணரலாம்.

(மண-2.ரை) குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார் மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும், வாராமற் காத்தலரிது.

(பரி- உரை) துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்களாகிய குன்றின் முடிவின் கணின்ற முனிவரது வெகுளி தானுள்ள வளவு கணமேயாயினும் வெகுளப் பட்டாரால் தடுத்தல் அரிது.

(ஆராய்ச்சியுரை) பெரியாருடைய சினத்திலிருந்து பிறர் தப்பிக்க முடியாது என்னும் கருத்திலேயே உரையாசிரியர்