பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ஆழ்கடலில்


கொள்ளல், சாப்பிடுதல், விழுங்கல் என்னும் சொற்கள், தொலைத்தல் - அழித்தல் என்னும் பொருள் தருவதை நோக்குக. இச்சொல் வழக்கு மக்களது பேச்சில் எவ்வாறு புகுந்தது? எப்போது புகுந்தது? மிக மிகப் பழங்காலத்தில் உயிரைத் தொலைத்துத்தானே உண்டார்கள்? அதாவது மக்கள் வேட்டையாடித்தானே உண்டார்கள்? மக்களுக்கு மக்கள் கொன்றும் உண்டார்களாம். பின்னரே பயிர்த் தொழில் வளர்ந்தது? இப்போதும், மக்கள் விலங்கு முதலியவற்றை, உயிர் போக்கி உண்ணல் நடைபெறுகிறதே! இந்த அடிப்படையில் அன்று தொட்டு எழுந்ததுதான் இச்சொல் வழக்கு!

அடுத்து, இக் குறளில், 'தோற்றம்' என்பதற்குப் பார்வை என்பது பொருள். "இப்பொழுதெல்லாம் எனக்குத் தோற்றம் சரியாய்ப் புலப்படுவதில்லை" என்று கிழங்கள் முணுமுணுப்பதை நாம் கேட்கின்றோம் அல்லவா? பார்வை என்ற பொருளில் தானே தோற்றம் என்று சொல்கின்றனர் முதியோர்கள்.

வள்ளுவர், மற்றோரிடத்தில் 'கண்ணோட்டம்' என்னும் தலைப்பில், கண்ணைப் பற்றிப் பத்துக் குறள்கள் இயற்றியுள்ளார். அங்கே, இனிய பார்வை -- இரக்கப் பார்வை, அன்புப் பார்வை- அருள் பார்வை உடையதுதான் கண் எனப்படும்; கண் என்றால் கண்ணோட்டம் அதாவது இரக்கம் என்றெல்லாம் கருத்தமைத்து வைத்துள்ளார். உலக வழக்கில் கூட, 'உனக்குக்கண் இல்லையா'? என்கின்றனரே! இல்லையா என்றால் இரக்கம் இல்லையா என்பது தானே பொருள் !

உண்மை நிலைமை இப்படியிருக்க, இந்தப் பேதைப் பெண்ணின் கண்களோ, இயற்கைக்கு எதிர் மாறாயுள்ளன - அதாவது - பார்த்தவரது உயிரைப் பருகுகின்றன. இதுதான்