பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

ஆழ்கடலில்


(விளக்கவுரை) இந்தக் குறளைப் படித்ததுமே வயிற்றெரிச்சல் கிளம்பிவிட்டது. இருக்கும் இழிநிலைக்கு நாணுகின்ற மான உணர்ச்சி ஏற்பட்டு விட்டது. இருந்த கண்களைக் கெடுத்துக்கொண்டு கண்ணாடி மாட்டிக்கொண்ட எளிய நிலை கூட அன்று நம் நிலை - இருந்த கண்களைத் தோண்டி எடுத்து விட்டு இரவல் கண்களைப் பொருத்திக் கொண்ட ஏளன நிலைதான் நமது நிலை. எண்ணும் எழுத்தும் இருகண்கள் என்றுள்ளாரே - தமிழர்களுடைய அந்தச் சொந்தக் கண்கள் எங்கே? மிக மிகச் சின்ன சின்ன பின்னத்துக்கு (Fraction) எல்லாம் தமிழ்க்கணக்கில் வாய்பாடு இருக்கிறதே! நாம் ஏன் படிக்கவில்லை? இப்போது ஒரு பின்னக்கணக்கைப்போட இரண்டு பக்கங்களை வீணாக்குகிறோமே - ஏன்? இப்போது பெரும்பாலோர்க்குக் கணக்கு வருவதில்லையே - ஏன்? பள்ளிக்கூடத்தில் படிப்பதல்லாமல், கணக்குக்கு என்று தனி ஆசிரியர் வேறு வைத்துப் பணத்தைக் கொட்டியழுகிறார்களே --- பயன் என்ன? "எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைத்த பாடு உண்டா?" ஏன் இந்நிலை? தாய்மொழிக் கல்வி போய்விட்டது - அவ்வளவுதான்! இந்த வயிற்றெரிச்சலைச் சிறிது நேரம் மறந்து குறளுக்குள் செல்வோம்.

வள்ளுவனார் கல்வியை எண்ணும் எழுத்தும் என இரண்டாகப் பிரித்தார். இப்பொழுதும் நாம் படிக்கும் இலக்கியம், இலக்கணம். இசை, நாடகம், வரலாறு, நில நூல், தத்துவம், அறநூல், சட்டநூல், உளநூல், பொருளியல், அரசியல், வாணிகவியல், கணக்கு, அறிவியல், மருத்துவம், பொறியியல் முதலியவற்றுள் ஒவ்வொன்றையும் இந்த இரண்டனுள் ஏதாவது ஒன்றில் அடக்கலாம். இருப்பினும், ஒன்றுக்குள்ளே மற்றொன்றும் ஊடுருவி நிற்கும். இந்த இரண்டுமின்றிக் கல்வி ஏது? கலைதான் ஏது? ஆனால் நாம் இன்றைக்கு இரண்டு கண் குருடராக