பக்கம்:அருளாளர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முன்னுரை

அருளாளர்கள் என்ற பெயரில் வெளியாகும் இந்நூல் பதினொரு கட்டுரைகள் கொண்டதாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்த யான் இதுவரை வெளியிட்ட நூல்கள் இலக்கியத் தொடர்பு உடையனவாகும். எவ்வளவுதான் இலக்கியத்தில் ஈடுபட்டிருந்தாலும் மனத்தின் ஆழத்தில் ஆன்மிகம், சமயம், அருளாளர்கள் என்ற அடிப்படையில் எண்ண ஓட்டங்கள் இருந்துதான் வந்தன. வாய்ப்பு நேர்ந்த பொழுதெல்லாம் தனித் தனிக் கட்டுரைகளாக ஆன்மிகவாதிகள்பற்றி எழுதியது உண்டு. இவற்றில் பெரும்பான்மையானவை முதலில் சொற்பொழிவாக செய்து, பின்னர் எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டவை ஆகும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் திருவிடை மருதூரில், திருமந்திர மாநாடு ஆண்டுதோறும் மிக விரிவாக நடைபெற்றது. அம் மாநாட்டில் பேசியதே திருமந்திரம் - பொருள் நிலை என்ற இரண்டாவது கட்டுரையாகும். அதே போல இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கோவை நன்னெறிக் கழகத்தில் பேசப் பெற்றதே நம்மாழ்வார் என்ற தலைப்பில் வரும் கட்டுரை ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/6&oldid=1293114" இலிருந்து மீள்விக்கப்பட்டது