பக்கம்:அருளாளர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமூலர் 3

திருமூலர் யோகப் பயிற்சியால் இந்நிலையைப் பெற்றவராவார். அவருடைய விரிவான வரலாறு இன்று நமக்குக் கிடைக்கவில்லை. திருத்தொண்டர்புராணம் ஓரளவு இவர் சரிதம் கூறுகிறது. அதன்படி முனிவர் ஒருவர் தம் யோகசித்தியால் இறந்து கிடந்த இடையன் ஒருவன் உடலிற் புகுந்து அவன் மாடுகளைக் காத்துப் பின்னர் தம் உடலைத் தேட, அது காணாமையால் அவன் உடலிலேயே தங்கிவிட்டார் என்று கூறப்பெறுகிறது. அதன் பின்னர் மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு ஒரு திருமந்திரம் வீதம் மூவாயிரம் அருளிச் செய்தார் என்றும் கதை பேசப்படுகிறது. தவவன்மையால் மிக நீண்டகாலம் உயிருடன் இருந் திருக்கலாம். அதுபற்றி இக்கதை எழுந்ததோ என்னவோ தெரியவில்லை. அது எவ்வாறாயினும் நமக்குக் கவலை இல்லை. திருமூலர் என்ற பெயர் உடைய ஒரு பெரியார் “திருமந்திரம்’ என்ற அரியதொரு நூலை அருளி உள்ளார். அந்நூலைப் படிக்கும் பொழுது அவர் மெய்ப்பொருள் அறிவு பெற்றவர் என்பது நன்கு புலனாகிறது. உண்மைப் பொருளை கண்டவர் என்பதற்குச் சான்றாக அவருடைய நூலிலிருந்து சில பாடல்களைக் காண்போம். மெய்ப்பொருள் அறிவுநிலையைப் பெற யோகம் ஒரு சாதனம் எனக் கண்டோம். அதுபற்றித் திருமூலர் இதோ பேசுகிறார்.

'
 புள்ளினும் மிக்க புரவியைமேற்கொண்டால்
 கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும்
 துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே'

திருமந்- 566)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/12&oldid=1291919" இலிருந்து மீள்விக்கப்பட்டது