பக்கம்:அருளாளர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளாளர்கள்

36


36 அருளாளர்கள்

பெரியார் பாய்திரை ஞாலத்தின் பற்பல விடங்களில் பற்பல காலங்களில் தோன்றி மறைந்தனர். கிறிஸ்து பெருமான், புத்தபெருமான், நபிநாயகம் போன்றவர்களும் இவ்வகுப்பைச் சேர்ந்தோரேயாவர். இப் பெரியோர் ஒவ்வொருவரும் அவ்வக் காலத்திற்கேற்ப அறவுரைகள் ஈந்து போயினர், மேலைநாட்டில் இயேசுநாதர் அறிவுறுத்திய பிழைக்கு இரங்கி அழுது வீடுபெறும் நெறியினைப் பெரிதும் போற்றி இந் நாட்டிடை அதனைக் கூறிய பெருமை மணிவாசகப் பெருமானுக்கே உரியதாம். தன்பிழையை நினைந்து உருகி அழுது அதற்கு மன்னிப்புப் பெறுதல் என்பது அன்பு நெறியிற் செல்கின்ற அடியவர்க்கே உரியதாம். அதனாலேயே போலும் மணிவாசகப்பெருந்தகையார் “அழுது அடி அடைந்த அன்பர்’ என ஒரு பெயரும் பெற்றனர்.

திருவாசகத்தில் பிழைக்கிரங்கி அழும் இடங்கள் பரக்கக் கிடக்கின்றன. ஒன்றிரண்டு காணல் வேண்டு மாயின் இவ்வடிகளை உற்று நோக்குவோமாக: “என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதி கண்டாய்’, (திருவா: 6,50) “ஆனால் வினையேன் அழுதா உன்னைப் பெறலாமே’, (திருவா:9,10) “பொறுப்பான்றே பெரியோர் சிறுநாய்கள் தம்பொய்யினையே".

இனி, இவ்வரிய நூல் காட்டும் அறநெறிதான் யாது? இதனுள் உயிர் வீடுபேற்றினை அவாவவேண்டியதன் இன்றியமையாமையும், அதற்குரிய வழிகளும் அவ்வழி களிலுள்ள இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், நீக்குங்கால் வேண்டப்படும் துணைவனும், அத்துணை வனின் வலிமையும், அவ்வாறு அவ்வீட்டை அடையின் அதன் கண் உண்டாம் இன்பமும் கூறப்பட்டுள்ளன.

உலகிடைப் பிறந்த எல்லா உயிர்களும் ஏதோ ஒரு பொருளை நாடி அலைகின்றன. யானை முதல் எறும்பு ஈறாய உயிர்கள் கேவலம் உணவு ஒன்றை மட்டும் நாடி அலைகின்றனவோ? இனி அவற்றினும் மேம்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/45&oldid=1291392" இலிருந்து மீள்விக்கப்பட்டது