பக்கம்:அருளாளர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. திருமூலர்

திருமூலர் என்றவுடன் 'மெய்ப்பொருள் அறிவு’ பெற்றவர் என்ற நினைவு தோன்றுகிறது. மெய்ப்பொருள் அறிவுநிலை என்பதை Mysticism என்ற ஆங்கிலப் பதத்தின் நேர்ப் பதமாகப் பயன்படுத்துகிறோம். மெய்ப் பொருள் அறிவுநிலை என்பது ஒரு வகை மனநிலையாகும். இந் நிலை அடைந்தவர்கள் பின்னர் அந்நிலை பற்றிய முழு விளக்கமும் தந்தது இல்லை. காரணம் சொற்களால் அந்நிலை விளக்கப்பட முடியாமைதான். எவ்வளவு விளக்கினாலும் விளங்கிக் கொள்வதும் கடினம். சர்க்கரை என்றவுடன் அதன் தன்மையை நாம் அறிவதோடு, அதன் சுவையையும் உணருகிறோம். முன்னர் சர்க்கரையைத் தின்று அறியாதவன் என்ன செய்ய முடியும்? அது பற்றி ஆராய்ச்சி செய்வதும் அறிவதும் ஒன்று. ஆனால், சுவையை அனுபவிப்பது மற்றொன்று. இன்று நாம் மெய்ப்பொருள் அறிவுநிலைப் பற்றிப் பேசுவதும் ஆராய் வதும் இது போன்றதே. பேச்சிலும் ஆராய்ச்சியிலும் மட்டும் உண்மை காணுகிற ஒரு விஷயம் அன்று மெய்ப் பொருள் அறிவுநிலை; என்றாலும், பிறர் இந்நிலையைப் பெற்று அனுபவித்துக் கூறியவற்றை அறிய முயல்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஒரு சிலர் இவ்வனுபவத்தைக் குறை கூறுவதையும், அனுபவம் பெற்றவர்களை எள்ளி நகையாடுவதையும் காண்கிறோம். இது இசை அறிவு இல்லாத ஒருவன், இசையில் ஈடுபட்டுத் தன்னை மறந்திருக்கும் ஒருவனை கேலி செய்வதையே ஒக்கும். அறிவால் அறியப்படுவனவற்றை ஒருவருக்கொருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/10&oldid=1292092" இலிருந்து மீள்விக்கப்பட்டது