பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


குன்றுகளையுடைய நாடனும், நல்ல வயல் பொருந்திய ஊரனும் குளிர்ந்த கடல் நிலத்தையுடைய சேர்ப்பனுமாகி யவன் தலைவன் அவன் என்னைப் பிரிதலால் நெறி பிறழ்தல் அமையுமாயினும் முன்பு போல் இன்றும் கடும்பகலில் வரு கின்றாய் அஃது ஒழிந்து வளைவான உப்பங்கழியில் மலர்ந்த நெய்தல் மலர் இதழ்குவியக் காலை வரினும் வருக, வரின் நின்னை விலக்குபவர் எவரும் இலர்” என்று மாலைக் காலத்தைப் பார்த்துத் தலைவியுரைத்தாள்.

82. கடலைவிடப் பெரியது அவர் நட்பு! நெய்தல் இருங் கழி நெய்தல் நீக்கி மீன்உண் குருகினங் கானல் அல்கும் கடல் அணிந்தன்று, அவர் ஊரே, கடலினும் பெரிது எமக்கு அவருடை நட்பே. - ஐங் 184 தலைவி, "நெய்தல் நிலத்தில் உள்ள பெரிய கழியில் மலர்ந்த நெய்தலை நீக்கி, அதன் அருகில் மேயும் மீனை உண்ணும் குருகுப் பறவை, தன் இனத்துடன் கூடிக் கானலில் தங்கும் கடலால் அழகு பெற்றது அவரது ஊர். அவரது நட்பு எமக்கு அக் கடலை விடப் பெரியது" என்று தூது வந்த வர்களிடம் மறுத்துக் கூறினாள்.

83. யாழினும் இனிய சொல்லாள் அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் அரம் போழ் அவ் வளைக் குறுமகள் நரம்பு ஆர்த்தன்ன தீம் கிளவியளே! - ஐங் 185 தலைவன் "அச்ையும் இதழ்கள் பொருந்திய நெய்தல் நிறைந்த கொற்கை நகரத்தின் முன் துறையில் பெறப்படும் முத்தைப் போன்ற பற்கள் பொருந்திய சிவ்ந்த வாயினள் அரத்தால் அராவப்பட்ட அழகிய வளையலை உடைய இளையவள்; யாழ் இசை போன்ற இனிய சொற்களை உடையவள் ஆவாள்” எனத் தன்னால் விரும்பப்பட்டவளின் தனிச் சிறப்புக் கூறினான்.