பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


வைகறை மலரும் நெய்தல் போலத் தகை பெரிது உடைய காதலி கண்ணே! - ஜங் 188 "கூட்டமான குருகுகள் கரிய உப்பங்கழியில் வாழும் செம்மையான இறால் மீன்களை உண்ணும் பாண்டிய மன்னனின் கொற்கை என்னும் ஊரின் பெரிய துறையில் வைகறைப் பொழுதில் மலரும் நெய்தல் மலர்போல் எம் காதலியின் கண்கள் அழகு மிக உடையன ஆயின" என்று தலைவன் தலைவியின் இல்லற வாழ்வினை உரைத்தான்்.

87. கண்கள் மலர்ந்தன புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல் பொன்படு மணியில் பொற்பத் தோன்றும் மெல்லம் புலம்பன் வந்தென, நல்ல.ஆயின தோழி என் கண்ணே. - ஐங் 189 "தோழியே, புன்னை மலரின் நுண்மையான துகள் படிந்து கிடக்கும் நெய்தல் மலர், பொன்னிடை வைக்கப் பட்ட நீலமணி போன்று விளங்கித் தோன்றும் மென்மை யான கடற்கரையை யுடையவன் மணந்து கொள்ளும் பொருட்டால் வந்தனன். அதனால் என் கண்கள் மலர்ச்சி யுற்றன” என்று தோழி தலைவியைப் பார்த்து மகிழ்ந்து கூறினாள்.

88. தலைவன் நெஞ்சம் தண் நறு நெய்தல் தளை அவிழ் வான்பூ வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும் மெல்லம் புலம்பன் மன்ற - எம் பல் இதழ் உண்கண் பணி செய்தோனே. - ஐங் 190 “எம் பலவான இதழ்களையுடைய பூப்போலும் மை தீற்றப் பெற்ற கண்கள் நீர் வடிந்து வருத்தம் அடையச் செய்தவன், வெண்மையான நெல்லை அரியும் உழவர் நெய்தலின் முறுக் கவிழ்ந்த அழகிய பூவை விலக்கி நெற் பயிரையே அறுக்கும் மென்மையான கடற்கரையை உடைய வன் ஆவான்” என்று தோழி தன் தலைவியின் உள்ளங் கவர்ந்த கள்வனைக் குறிப்பிட்டுக் கூறினாள்