பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

29


58. விரைந்து போய் கூடுக வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக், காணிய சென்ற மட நடை நாரை நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ! பண்டையின் மிகப் பெரிது இணைஇ முயங்குமதி, பெரும மயங்கினன் பெரிதே' - ஐங் 160 தலைவி, "வெள்ளாங்குருகின் குஞ்சைத் தன் குஞ்சு என்று எண்ணி அதைக் காண்பதற்காகச் சென்ற மடநடையை உடைய நாரை தன் குஞ்சு அதுவன்று என்பதைக் கண்டு வருந்தியதன் மேலும் வருத்தம் மிகும் துற்ைவனே, நின் காதற் பரத்தையின் புலவி தீராமையின் நின்னைவிட மிகவும் வருந்தி மயங்கினாளாதலால், பெரும, நீ விரைவாய்ப் போய் முன்பு போன்று அவளைக் கூடுவாயாக!” என்று தலைவனைப் பார்த்துக் கூறினாள்.

சிறு-வெண்டகாக்கை 59. சொற்கள் வேறாயின பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை கருங் கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப் பயந்து நுதல் அழியச் சாஅய், நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே! - ஐங் 161 தலைவி, “பெரிய கடற்கரையில் உள்ளதான் சிறு வெண் கடற் காக்கை நீந்தும் அளவு பெருகிய நீரையுடைய பெரிய கரையில் இரையான சிறு மீன்களை நாடியுண்டு மலர்கள் மணம் கமழும் சோலையில் தங்கும் துறைவனது சொற் களோ தமக்குரிய தன்மையில் வேறாக ஆயின” என்று ஆற்றாது சொன்னாள்

60. சொற்கள் வேறுபட்டன!

பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை

நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு, பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவன் சொல்லோ பிற ஆயினவே - ஐங் 162