பக்கம்:அருளாளர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளாளர்கள்

42


42 அருளாளர்கள்

இருளான பொருள் கண்டதல்லாற் கண்ட என்னையுங் கண்டிலேன்-என்னையடி தோழி "

என்றும்,

“பாழான என் மனம் கனியவொரு தந்திரம் பண்ணுவ துனக் கருமையோ’’

என்றும் வினவுகிறார். அவ்வாறு அவனருளையே வேண்டிப் பெற்றாலொழிய பிறவியின் மாட்டு விடாது வந்த பற்று விடாதாகும். இக் கருத்தைப் பற்றியன்றோ

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்- பற்றுக பற்று விடற்கு” குறள்-350 எனப் பொய்யாமொழியும் எழுந்தது.

இறுதியாக அடிகள் கூறுகின்றார்: அவ்வாறு அவனருளே துணையாகக்கொண்டு, தோன்றும் இன்னல் எல்லாம் வென்று, இறுதியில் அவனைப் பெற்றால் அடைகின்ற இன்பம் எத்தன்மையது? “நினைத்தொறும், காண்டொறும், பேசுந்தொறும், எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன் சொரியக்” கூடியதாம். உலகிடை இன்பம் துன்பத்தையே பிற்பயக்கும். ஆனால், இவ்விறை இன்பம் “அந்தமொன்றில்லா ஆனந்தம் தரக்கூடியதாம்.

இதுகாறுங் கண்டவற்றால் மணிமொழியாரின் திருவாசகம், பிறவிப் பெருங்கடல் நீந்தவேண்டுமென்றிருப்பார்க்கு எவ்வாறு வழிகாட்டியாயிருப்பதென்பதும் அஃதும் அப்பேற்றை அடைந்தாரொருவர் கூறியதென்பதும், எக்காலத்தும், எச்சமயத்தார்க்கும், விளக்காயுள்ளதென்பதும் இந்நூல் யாவரும் விரும்பிக் கற்றற்குரிய தென்பதும் ஒருவாற்றான் பெறப்படுகின்றதன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/51&oldid=1291401" இலிருந்து மீள்விக்கப்பட்டது