பக்கம்:அருளாளர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 * அருளாளர்கள்


118. அருளாளர்கள்

அர்ச்சனை செய்த பின்” - அத்தனை சோடச உபசாரங்களும் செய்ய வேண்டுமென்று இவரும் சொல்லிக் காட்டுகிறார்.

இனி கற்பனைகள் பேசுகிறார். நடராசப் பெருமான் தெற்கு நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். அதற்கு ஒரு காரணம் சொல்கிறார். என்ன தெரியுமா? வட திசைதான் இறைவனுக்கு உகந்தது. அப்படி இருக்க ஏன் தென் திசையை நோக்கி நடராசப் பெருமான் ஆடுகிறார் என்பதற்குக் காரணம் சொல்கிறார். “கடுக் கவின்பெறு கண்டனும் தென்திசை நோக்கி அடுக்க வந்து வந்தாடுவான்.. நடராசப் பெருமானுக்கு இலக்கணம் சொல்கிறார். கண்டன் என்று பெயர். அதாவது நீலகண்டன் என்று. அந்தக் கண்டத்திற்கு இலக்கணம் சொல்ல வந்த இவர், “கடுக்கவின்” - கடு என்றால் விஷம். விஷம் அழகு பெறும்படியான கண்டமாம். ஆகவே விஷத்தாலே இவன் அழகு பெற்றானா அல்லது இவனால் விஷம் அழகு பெற்றதா என்றால் இவனுடைய கண்டத்திலே தங்கியதால் அதற்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. பிறராலே விஷம் என்று எள்ளி, ஒதுக்கக் கூடியதாகிய விஷம்கூட இறைவனுடைய கண்டத்தில் தங்கிவிட்ட காரணத்தாலே நீலகண்டம் என்று பெருமை அடைவதாக ஆகிவிட்ட தாம்.

“கடுக்க வின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி அடுக்க வந்துவந் தாடுவான்’

   (திருவிளை. திருநா: 55)

ஏன் தெரியுமா?

“ஆடலின் இளைப்பு விடுக்க’

நாட்டியம் ஆடுபவர்க்கு களைப்பு உண்டாகும். அதை விடுக்க, “ஆரமென்--------- மடுக்கவும்” - ஆரம், மென்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/127&oldid=1291858" இலிருந்து மீள்விக்கப்பட்டது