பக்கம்:அருளாளர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறிகளையும் அவற்றால் அனுபவிக்கப்படும் புலன்களையும் அழிக்க முடியாது என்பதை நன்குணர்ந்து இருந்தனர். மேலும் இவை அழிக்கப்பட வேண்டுமாயின் இறைவன் ஏன் இவற்றைப் படைக்க வேண்டும். தேவையற்ற ஒன்றை நமக்குத் துன்பந்தர வேண்டும் என்ற காரணத்திற்காக இறைவன் படைத்திருப்பானா? நிச்சயமாக இருக்க முடியாது. பரம கருணாமூர்த்தியாகிய அவன் தேவை இல்லாத பொறிபுலன்களைப் படைத்து நம்மிடம் ஏன் ஒப்படைக்க வேண்டும்?

   உண்மையாகவே இவை அழிக்கப்பட வேண்டும் எனில், இப்படிப்பட்ட பொறிபுலன்களைப் படைத்தவன் கருணையற்றவனாக இருத்தல் வேண்டும். அவனோ கருணையின் கடல் போன்றவன்; அவன் இவற்றைப் படைத்தும் உள்ளான் எனில், அதன் உட்பொருளை அறிந்து கொள்ள வேண்டியது நம் கடமையாகும். அழகு நிறைந்த இந்தப் பெரிய உலகையும் அதனை அனுபவிப் பதற்குரிய பொறி, புலன்களையும் இறைவன் படைத்தான் எனில் இந்த அழகைப் பொறிகளின் மூலம் அனுபவிக்க வேண்டும் என்பதே இறைவனுடைய கருத்தாக இருத்தல் வேண்டும்.
  அன்றியும் இவ்வுலகமாய் அதில் நிறைந்த பொருள்களாய் இருப்பவன் இறவைன் ஒருவனே என்பதையும் நம் பெரியோர் நன்கு அறிந்திருந்தனர்.

'மண்ணை இருந்து துழாவி 'வாமனன்

               மண் இது'என்னும்
'செய்யாது ஓர் ஞாயிற்றைக் காட்டிச் 
      'சிரீதரன் மூர்த்தி'ஈதென்னும்'
‘அறியும் செந்தீயைத் தழுவி 
                'அச்சுதன்'என்னும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/101&oldid=1291574" இலிருந்து மீள்விக்கப்பட்டது