பக்கம்:அருளாளர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120*அருளாளர்கள்


"அஹம் க்ரதுரஹம் யக்ஞ: ஸ்வதாஹம ஹமெளஷதம்

மந்த்ரோ ஹம ஹமேவாஜ்யம ஹமக்னிரஹம் ஹீதம்"
(கீதை : 9, 16)

என்ற பாடலினுடைய நேரான மொழி பெயர்ப்பு என்று சொல்லலாம். ஆக அவருடைய வடமொழிப் பயிற்சியும், புலமையும் பல்வேறு இடங்களில் காட்டப்பெறுகிறது. தமிழ்ப் பாடல்களைப் பொறுத்த மட்டில், யக்ஞமாகவும், யக்ஞத்திலே அவிஷ்-ஆகவும், நெருப்பை வளர்க்கின்ற யக்ளஞ கர்த்தாவாகவும், உணவாகவும் இருக்கின்றவன்’ என்று சொல்லுகின்ற மரபு கிடையவே கிடையாது. இதை முதன் முதலாக இவர் புகுத்திப் பேசுகிறார்.

    இதற்குமேலே மதுரையம்பதியைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வருகிறார். மரபு வழிபாடும் போதும் அந்தப் புலவனுடைய மனம் எங்கே இருக்கிறதென்பதைக் காட்டிவிடும். ஞானசம்பந்தர் பேசுகிறார்,

“பாரிசையின் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோம்
::ஓசையைக் கேட்டு வேறி மலை பொழிற்கிள்ளை
::வேதங்கள் பொருள் சொல்லும் மிழலையாமே”

என்று சொல்லுவார். திருவிழிமிழலையிலுள்ள கிளிகள் வேதத்திற்குப் பொருள் சொல்லுகின்றனவாம். கிளிகள் எப்படி வேதத்திற்குப் பொருள் சொல்ல முடியுமென்று

நினைக்கிறீர்களா? “பாரிசையின் பண்டிதர்கள் பன்னாளும் பயின்று ஒதும் ஓசை’ - புலவர்களாக இருக்கிறவர்கள் ஒரு நாள் அல்ல, பல நாளும் ‘பயின்றோதும் - அதைத் தாங்கள் பயில்வதோடு

பிறருக்கும் ஒதுவிக்கின்றார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கிளிகள். ஆகவே வேறிமலி மொழிற்கிள்ளை’, வேறி என்றால் வேலி-வேலியில் இருக்கிற கிளிகள் அந்த வேதத்திற்குப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/131&oldid=1292099" இலிருந்து மீள்விக்கப்பட்டது