பக்கம்:அருளாளர்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226 * அருளாளர்கள்



சமுதாயத்தையும் படைக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார் என்றால், 19ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய புரட்சியைச் செய்தவராகிய வள்ளற்பெருமான் சமயங்களினுடைய ஒருமைப்பாடு, சமயங்களுக்கும் மக்களுக்குமுள்ள தொடர்பு, மக்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ள வேண்டியது எது? என்ன பணியை மேற்கொள்ள வேண்டுமென்று அதிஅற்புதமாகக் கூறுகிறார். வள்ளலார் வகுத்த வாழ்க்கை நெறி நமக்கு மட்டுமல்லஇன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் மனித சாதி முழுவதும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறி என்பதை நன்றாக அறிய முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/237&oldid=1292062" இலிருந்து மீள்விக்கப்பட்டது