பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

தி அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்

இடிய இடைக் கொள்ளும் சாயல், ஒருத்திக்கு அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின்; அன்னேன் ஒருவனேன், யான் என்னானும், பாடு எனில், பாடவும் வல்லேன், சிறிது ஆங்கே 'ஆடு எனில், ஆடலும் ஆற்றுகேன், பாடுகோஎன் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக, நன்னுதல் ஈத்த இம் மா? திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும், தம் காதல் காட்டுவர், சான்றவர் - இன் சாயல் ஒண்டொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் கண்டும், கண்ணோடாது, இவ் ஊர். தாங்காச் சினத்தோடு காட்டி உயிர் செகுக்கும் பாம்பும் அவைப் படில், உய்யுமாம் - பூங் கண் வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம் உணர்ந்தும், உணராது, இவ் ஊர். * வெஞ் சுழிப் பட்ட மகற்குக் கரை நின்றார் அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் - அம் சீர்ச் செறிந்த ஏர் முறுவலான் செய்த இக் காமம் அறிந்தும், அறியாது. இவ் ஊர். ஆங்க என் கண் இடும்பை அறிஇயினென்; நும்கண் தெருளுற நோக்கித் தெரியுங்கால், இன்ன மருளுறு நோயொடு மம்மர் அகல இருளுறு கூந்தலாள் என்னை அருளுறச் செயின், நுமக்கு அறனுமார் அதுவே.

- கலி 140

“என்னைப் பார்த்த நீங்கள் எல்லாம் விரைய வந்து அவ்

ஊரில் முன்னம் அறியாதீர் போன்று பார்க்கின்றீர் நா அமைக்கப் பட்ட மணியைக் கழுத்தில் கட்டிக் கையினால் பிடித்து அமைந்த கயிற்றோடு நான் எனது கையிலே கொண்டது மடல் மா' இல்லை ஏறுபவர் ஏறும் குதிரை என்றும் தலையிலும் மார்பிலும் உள்ள இவை தகட்டுப்