பக்கம்:அருளாளர்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 191

முருனைப்பற்றி ஒர் ஆயிரம் பாடல், சிவபெருமானப் பற்றி ஒர் ஆயிரம் பாடல் பாடியிருக்கலாம். ஆச்சரியம் இல்லை. அப்படிப் பாடியிருப்பாரேயாகில் ஏனையோரைப் போல, அருணகிரியாரைப் போல முருகனைப் பற்றியும், தேவார ஆசிரியர்கள் நாயன்மார்களைப் போல சிவபெருமானைப் பற்றியும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவராகி விடுவாரே தவிர புதுவழி வகுத்தவர் ஆக மாட்டார். ஆகவே இறைவன் ஒரு காரியத்தைச் செய்கிறான். இங்கு ஆழமாக நாம் சிந்திக்க வேண்டியது ஒன்றுண்டு.

சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்களைக்கூட சூழ்நிலை மாறும்போது தேவை ஏற்படும்போது இறையருள் அவர்களைத் தடம் மாற்றி வேறு வழிக்குக் கொண்டு செல்கிறது. ஒர் உதாரணத்தினால் இதனை நன்கு புரிந்து கொள்ள முடியும். பகவான் இராமகிருஷ்ணர் சக்தி வழிபாடு செய்தவர். அம்மையின் அருளை முழுவதுமாகப் பெற்றவர். அம்மையின் திருவருளைப் பெற்றதோடு அல்லாமல் அவருடைய திருவடிகளைத் தரிசனமும் செய்தவர். அப்படிப்பட்ட ஒருவர், ஏட்டுக் கல்வி இல்லாதவர். சக்தி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பகவான் இராமகிருஷ்ணர் தம் தலை மாணாக்கராகிய நரேந்திரனை (விவேகானந்தர்) சக்தி வழிபாட்டில் செலுத்தவில்லை. மூன்று முறைகள் விவேகானந்தரை தொட்டுப் பின்னர் சக்தியை திருக்கோயிலுள் சென்று வழிபடச் சொல்கிறார். மூன்று முறையும் நரேந்திரனுக்கு வாக்கு, மனம், லயம் கடந்த அதீத நிலை கிட்டுகிறது. துவாதசாந்தப் பெருவெளியைக் கடந்து அன்னையின் தரிசனம் கிட்டுகிறது. ஆனால் விவேகானந்தரை அந்த வழியில் செல்லாமல் பகவான் தடுத்து விடுகிறார் இது ஏன்? பகவான் இராமகிருஷ்ணர் தாம் சென்ற வழியை விட்டுவிட்டு, வேறு வழியில் இவரைச் செலுத்த வேண்டிய காரணம் என்னவென்று சிந்திப்போமேயானால் ஓர் உண்மையை அறிந்து கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/202&oldid=1292166" இலிருந்து மீள்விக்கப்பட்டது