பக்கம்:அருளாளர்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152 * அருளாளர்கள்




--இதுவன்றே

மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே

(அற்புதத் திருவந்தாதி - 67)

இப்பாடல்கள் 11ஆம், திருமுறையில் காணப்படுவதால் இங்கே குறிப்பிடப் பெற்றாலும் பாடப்பட்ட காலத்தை நோக்கினால் கி.பி. 3ம், நூற்றாண்டைச்சேர்ந்த பாடலாகும். திருமுருகாற்றுப் படைக்கு அடுத்தபடியாக விளங்கும் அம்மையின் பாடல் ஒளி, ஒளிவிளக்கு என்ற இரண்டையுமே குறிப்பதை மேலே காட்டியுள்ள பாடல்கள் அறிவிக்கும்.

8ம் நூற்றாண்டில் சுந்தரர் காலத்தில் வாழ்ந்த சேரமான் பெருமாள் நாயனாரும் தாம் இயற்றிய பொன் வண்ணத்து அந்தாதியில்,


உயிருட்ம்பாகிய

சோதியைப் தொக்குமினோ -

(பொன். அந்தாதி 183)

என்று பாடுகிறார்.

மேலே காட்டப் பெற்ற எடுத்துக் காட்டுகள் சங்ககாலத்தில் இருந்து 10ம் நூற்றாண்டு வரையுள்ள சைவ சமய வளர்ச்சியில் ஒளி வழிபாடு எங்ஙனம் பெரியதோர் இடத்தைப் பெற்றிருந்தது என்பதை அறியலாம். பதினோரு திருமுறைகளிலும் சோதிபற்றி வரும் நூற்றுக் கணக்கான குறிப்புகளில் இடங்கருதி ஒரு சிலவற்றையே எடுத்துக் காட்டியுள்ளோம். .

12ம் நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணம் அம்பலத்து ஆடுகின்றவனை 'உணர்ந்து ஒதற்கரியவன்’ என்று குறிப்பிடும் அதே நேரத்தில் 'அலகில் சோதியன்’ என்றும் பாடுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/163&oldid=1292017" இலிருந்து மீள்விக்கப்பட்டது