பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 75 நான் வேலூருக்கு வந்தப்பல்லாம் நானா வரலே. 'போங்க! போய்ப் பார்த்திட்டு வாங்கன்னு அது துரத்தித்தான் நான் ஓடி வந்தேன். இந்த வாசகசாலை, முத்திருளப்பன் குடும்பம், எல்லாத்தையும் காப்பாத்த அதுதான் உபகாரம் பண்ணியிருக்கு. உபகாரம் பண்ணச் சொல்லி, நான் கேட்கலை. அவரு ஜெயிலுக்குப் போயிட்டதினாலே எதுவும் நிக்கப்படாது. நான் தரேன். செய்யுங்க 'ன்னு அதுவாக் கூப்பிட்டு உபகாரம் பண்ணிச்சு. இப்பக் கூடச் சித்தே முன்னே மாடி வழியா என்னைக் கூப்பிட்டு, 'வந்தாச்சா'ன்னு கேட்டுது. 'வந்தாச்சு; சாப்பிடப் போயிருக்காருன்னேன். உடனே உள்ளே ஒடி இந்த மெத்தை தலைகாணியைக் கொண்டாந்து கொடுத்துப்பிட்டு, 'பாவம்! ஜெயில்லே படுக்க வசதிகள் இருந்திருக்காது! இதை விரிச்சு நல்லாத் துரங்கச் சொல்லுங்கள். மொட்டை மாடியிலே படுக்க வேண்டாம்; பகல் முழுதும் வெயிலடிச்ச வெக்கை தரையிலே இருக்கும். உள்ளேயே படுக்கச் சொல்லுங்க'ன்னுது. மெத்தையோட நான் உள்ளே வர்ரத்துக்குள்ள மறுபடி கூப்பிட்டு, இந்த கூஜா பால், எல்லாத்தையும் கொடுத்திட்டு, ‘என்னைப்பத்தி அவருக்கு ஞாபகமாவது இருக்கா பத்தரே?' என்னு கண்ணுலே நீர் தளும்பக் கேட்டிச்சு உங்கம்மா உடம்புக்குச் சுகமில்லாமே படுத்தப்ப, ரெண்டு வாட்டி கூடை நிறையச் சாத்துக்குடி வாங்கிக் கொடுத்தனுப்பிச்சுது. நீயே வந்து, பெரியம்மாவைப் பார்த்துக் குடேன் அம்மான்னேன். அதுக்கு மதுரம் ஒப்புக்கலை.

வேண்டாம்! எனக்கு அவர்களைத் தெரியாது. என்னை பார்த்தா, அவர்களுக்குச் சொந்தப் பிள்ளை மேலேயே மனசு சம்சயப்படும். ஊர்க்காரர்களும் வம்பு பேசுவாங்க.என் பிறவி ராசி அப்படி ன்னுச்சு. தாசி தனபாக்கியத்துக்கு இப்பிடி ஒரு நல்ல மனசு நிறைஞ்ச பொண்ணான்னு நானே வியந்து போனேன். அந்த அழுக்குப் பிடிச்ச வீட்டிலே தன்னை ஒரு தேவதையா நடமாட வச்சுக்கிட்டிருக்கு அது. உங்களைப் பார்த்த நாள்ளேயிருந்து நீங்கதான் அதும்