பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஆத்மாவின் ராகங்கள்

மனசிலே இருக்கீங்க தம்பி. இத்தனை இங்கிதமான பொண்ணு அந்தச் சந்திலே இருக்க முடியும்னே என்னாலே நம்ப முடியலை. வேலூர்லே வந்திருந்தப்ப, 'மதுரத்துக்கு ஏதாச்சம் தகவல் உண்டா?ன்னு கேட்டேன். நீங்க ரொம்பக் கோபமாப் பதில் சொன்னிங்க. அந்தப் பதிலை அப்படியே வந்து சொல்லியிருந்ா அது மனசு ஒடிஞ்சு போயிருக்கும். ஏதோ, நானா இட்டுக் கட்டிச் சொன்னேன். பரோல்லே வரமாட்டேன்னு நீங்க பிடிவாதம் பிடிச்சதைச் சொல்லாமே, 'ஜெயில்காரன் விட மாட்டேன்னுட்டான்’னு உங்கம் மாவுக்குப் பொய் சொன்ன மாதிரி மதுரத்துக்கும் ஒரு பொய் சொன்னேன். அந்தக் காந்தி மகானைப் பின்பற்றத் தொடங்கின நாள்லேருந்து நான் பொய் சொல்றதை விட்டாச்சு. ஆனா, என்ன செய்யிறது? இது மனுசங்களோட உலகம். இங்கே சில சமயங்களிலே உண்மையைக் கூட பொய் ரூபத்திலேதான் வழிபட வேண்டிருக்கு தம்பி';

அவன் பதில் பேச முடியாமலும், குனிந்த தலை நிமிராமலும் உட்கார்ந்திருந்தான். முழங்கால்களைக் குத்த வைத்து முகத்தைப் புதைத்துக் கொண்டு அவன் அமர்ந்திருந்த நிலை தீவிர சிந்தனையைக் காட்டியது. ஒரு கூடை கருப்புத் திராட்சைக் குலைகளைக் கவிழ்த்தது போல் அவன் தலை சுருள் சுருளாகப் படிந்து கருமை மின்னியது. இருந்தாற்போலிருந்து தலை நிமிர்ந்து அவன் பத்தரை ஒரு கேள்வி கேட்டான்.

'ஜெயிலுக்குப் போறதுக்கு முந்தி, துணிக்கடை மறியலுக்கு முன்னே ஒருவாரமிருக்கும். அப்ப, நான் ஒரு நாள் ராத்திரி இங்கே படுத்திருந்தேன். மறுநாள் காலையிலே, கீழே படியிறங்கறப்ப பின் பக்கத்து மாடியைப் பத்தி உங்ககிட்ட விசாரிச்சேனே; ஞாபகமிருக்கா? -

'அதுக்கென்ன இப்ப? ஞாபகமிருக்கு. பின்பக்கம் ஒண்ணா நம்பர்ச் சந்துங்கிறது தெரியுமில்லேன்னேன். அடுத்த நாள். நீங்க மதுரத்தைப் பற்றியும் விசாரிச்சீங்க! தனபாக்கியத்தோட மகள்னும் பதில் சொன்னேனே?"